நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 1966 வெளிவந்த திருவிளையாடல் படம் 200 நாட்களுக்கு மேல் ஒடி பெரும் சாதனை படைத்தது என்று கூறினால் மிகையாகாது. அன்றைய புகழ் பெற்ற இயக்குனரான திரு. நாகராஜன் அவர்கள் பரமசிவனின் 64 திருவிளயாடல்களில் நான்கை மட்டும் எடுத்துக்கொண்டு திறம்பட எடுத்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
முதல் திருவிளையாட்டில் நக்கீரனாக வந்து சிவாஜி தருமியாக வரும் நாகேஷை விஷப்பரிட்சை செய்யும் காட்சி அருமையிலும் அருமை. கதைபடி நாகேஷ் 1000 பொற்காசுக்காக ஆசைப்படுகிறார். குறிப்பாக ஒரு இடத்தில் சிவாஜி “ஆசைக்கு நீ, அறிவிக்கு நான்” என்று கூறும் இடத்தில் ரசிகர்களின் கைதட்டல் அடங்கவில்லை.
நக்கீரர் தன் கவிதையில் பிழை இருக்கிறது என்று சொன்னவுடன் சிவாஜியின் முகம் மாறுகிறது. “என் கவிதையிலா தவறு கண்டு பிடித்தாய். என் கண்களை நன்றாகப்பார்” என்ற நடிகர் திலகத்தின் சிம்மக்குரலை உணர்ந்தவுடன் சிவபெருமானே தனக்கு காட்சி தந்ததை அறிந்து கரம் கூப்பி மன்னிப்பு கேட்கிறார் உண்மையான நக்கீரர். தவறு யார் செய்தாலும் சுட்டிக்காட்டுவதற்க்கு தயங்காத நக்கீரனை பார்த்து சிவாஜி “நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே” எனக்கூறி கொட்டகையை ஆர்ப்பரிக்க வைக்கிறார்.
“நான் சிவாஜியுடன் நடித்த திருவிளையாடல் 400 படங்களுக்கு சமம். ஒரு பய என்னை குறை சொல்ல முடியாது” என நாகேஷ் சிவாஜி 2001ல் மறைந்த பிறகு ஒரு விழாவில் கூறினார்.
திருவிளையாடலில் தன்னை மீறி மனைவியாக வரும் சாவித்திரி மாமனார் வீட்டு யாகத்துக்கு சென்றவுடன் சிவாஜி ருத்ரதாண்டவம் ஆடும்பொழுது பரமசிவனாகவே மாறிவிடுகிறார். பார்வதியால் அவருக்கு ஈடு கொடுத்து ஆட முடியவில்லை. தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டவுடன் நடிகர் திலகம், நடிகையர் திலகத்தை பார்க்கும் அந்த ஒரு பார்வையே “அவர் பாத்திரமாகவே மாறிவிடுவார், பார்ப்பவரையும் ஏமாற்றிவிடுவார்” என மறைந்த நடிகை தேவிகா கூறியது தான் நினைவுக்கு வருகிறது.
மீனவனாக வந்து தனது மனைவியை மீட்டு செல்லும் காட்சியிலும் சரி, ஏமனாதனின் அகந்தயை அடைக்கி பாணபத்திரரை காப்பாற்றும் காட்சியிலும் சரி சிவாஜி நடிப்பின் உச்சத்திக்கே சென்றுவிடுகிறார். குறிப்பாக பாலைய்யாவிடம் தன்னை பாணபத்திரராக வரும் மகாலிங்கம் நீ பாட்டுக்கு லாயக்கீல்லை என்று கூறி அனுப்பிவிட்டார் என்றவுடன் பாலைய்யாவின் ஆணவம் அடங்குகிறது. சங்கீத வித்துவான் பாலமுரளிகிருஷ்ணாவின் “ஒரு நாள் போதுமா’ பாட்டுக்கு, மதுரகுரலொன் சௌந்தரராஜன் “பாட்டும் நானே, பாவமும் நானே” பாட்டை சிவாஜீக்கு தகுந்தமாதிரி பாடுகிறார். ஆனால் சிவாஜி அதற்கு வாய் அசைக்கும் விதமே தனி. ஆவர் உடல் முழுக்க ஆடுகிற்து. சப்த நாடியும் ஒடுங்குகிற்து.
-கே. வேணுகோபால்