Paramparaa – The Tradition Continues….

துளசியின் மகிமையே மகிமை

                 துளசியின் மகிமையே மகிமை

                        கே.வி. வேணுகோபால்

காலம் காலமாக நம் இல்லங்களில் , ஆலயங்களில் வழங்கப்பட்ட தீர்த்தம் , அதில் உள்ள மருத்துவ குணங்கள் , அந்த தீர்த்தத்தை தயாரிக்கும் முறை பற்றி பல அறிஞர்கள் விரிவாக கூறியிருக்கின்றனர். தவிர, இந்தியாவில் ஆன்றோர்கள் புனித
ஆலயங்களின் வழிபாடுகள் மூலம்
சூட்சுமமாக உடல் நோயும் , உளநோயும்
நீங்கி நலம்பெற வழி வகுத்துள்ளனர்.
ஆலயங்களை வலம் வருதல், அங்கங்கள்
பூமியில் பட விழுந்து வணங்குதல்,
அங்கப்பிரதட்சணம் செய்தல், காவடி எடுத்தல், திருமண் இடுதல், திருநீறு , சந்தனம், குங்குமம் அணிதல், திருத்துழாய் (துளசி), வில்வம், பயன்படுத்துதல் போன்ற ஆன்மீக செயல்பாடுகள் அனைத்தும் உடலும் , உள்ளமும் நலம்பெற அமைந்துள்ளன. ஆலய வழிபாட்டு முறைகளில் தலைசிறந்ததாகப் புனித தீர்த்தம் வழங்குதல் அமைந்துள்ளது.
வைணவ திருத்தலங்களில் வழங்கும் “துளசி தீர்த்தம்” இரத்தத்தை சுத்தம் செய்வதுடன், உடலில் பிராணசக்தி மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை
வலுப்படுத்துகின்றது. துளசி தீர்த்தம்
தொடர்ந்து அருந்தி வருபவர்களுக்கு கேன்சர் எனப்படும் புற்று நோய் வராது என்பது மருத்துவ உண்மையாகும்.
சைவத்திருத்தலங்களில் வழங்கும் “வில்வ
தீர்த்தம்” குன்மம், வயிற்றுக் கடுப்பு,
மேகவாயு, போன்றவைகளைப்
போக்குகின்றது. அல்சர் எனப்படும் குடல்
புண்ணையும் போக்குகின்றது.
ஆலயங்களில் வழங்கப்படும் மேற்கண்ட
இரண்டு தீர்த்தங்களும் முறைப்படி தயார்
செய்தால் இம்மருத்துவ குணங்கள் நிச்சயம்
உண்டு
நாம் வீட்டிலேயே செய்து உண்டு
பயன்பெறக்கூடிய ஒரு புனித தீர்த்தம்.
இப்புனித தீர்த்தம் காய கற்ப சஞ்சீவியைப்
போல பற்பல நோய்களை நீக்கி நல்வாழ்வு
அளிக்கும் குணம் கொண்டது.
புனித தீர்த்தம் விவரங்கள் பின்வருமாறு:

1 – ஏலம்,
2 – இலவங்கம்,
3 – வால்மிளகு,
4 -ஜாதிப்பத்திரி,
5 – பச்சைக் கற்பூரம்
மேற்கூறியவைகளில் முதல் நான்கும் வகைக்கு ஒரு
பங்கும், பச்சைக்  கற்பூரம் கால் பங்கு
சேர்க்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.
முதல் நான்கு பொருள்களையும் உலர்த்தி
இடித்து பொடித்துக் கொண்டு  பிறகு
பச்சைக் கற்பூரத்தையும் பொடித்து
இதனுடன் கலந்து விட வேண்டும் என விளக்கப்படுகிறது. இதனை பாட்டிலில் பதனம் செய்து பூஜை அறையில்
வைக்க வேண்டும் . இந்த தீர்த்தப் பொடியை மூன்று விரல்அளவு அளவு எடுத்து ஒரு தாமிர தம்ளரில் தண்ணீரில் கலந்து முதல் நாள் இரவு வைத்து மறு நாள் காலை வெறும் வயிற்றில் பூஜை முடித்தவுடன் அருந்த சகல நோய்களும் எளிதில் நீங்கி உடல் பலம் பெறும் என கூறப்படுகிறது.
இதனுடன் சைவ வழிபாட்டில் உள்ளவர்கள்
வில்வம் சேர்த்து அருந்தலாம். வைணவ வழி
பாட்டில் உள்ளவர்கள் துளசி சேர்த்து
அருந்தலாம்.
இருதயம், இரைப்பை பலம் பெரும், கண்கள்
பற்றிய நோய் யாவும் நீங்கும், நரம்புத்தளர்ச்சி, சளி, சுவாசகாசம் நீங்கும், இரத்தம் சுத்தியாகும், பித்த ரோகங்கள், வாந்தி, தலைசுற்றல், மயக்கம், வாய்க்கசப்பு,
மூச்சடைப்பு, வயிற்று வலி, கழிச்சல்,
மார்புவலி, மாரடைப்பு, போன்றவைகள்
நீங்கும். இரத்தம் பெருகும் .
இது உடலைப் பற்றிய நோய்களை நீக்கும்
வல்லமை கொண்ட சஞ்சீவி மருந்து
முறையாகும். இது அனுபவத்தில் கை கண்ட
அரியமுறை.
துளசிதீர்த்தம் இந்து சமயத்தில் துளசிச்செடி புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. அபிஷேக தீர்த்தங்களிலும், தெய்வீக மூர்த்திகளுக்கு மாலையாக அணிவிப்பதிலும், பூசைகளின் பொது அர்ச்சனையாக சமர்ப்பிப்பதிலும்,  துளசியிலை முக்கியத்துவம் பெறுகிறது. மிகத் தொன்மையான காலத்தில் கிரேக்க நாட்டுத் தேவாலயங்களில் துளசி கலந்த புனித நீர் மக்களுக்கு தீர்த்தமாக விநியோகிக்கப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன.
துளசி எல்லா இடங்களிலும், பலதரப்பட்ட காலநிலைகளிலும் வளரக் கூடியதாகும். துளசி அதிகமாக வளரும் பகுதிகளில் உள்ள சயனைட் போன்ற விசவாயுக்களை உள்ளெடுத்து கூடுதலான ஒட்சிசன் நிறைந்த வாயுவை வெளியிடும். இது மனிதர்கள் சுவாசத்திற்கு சிறந்த புத்துணர்ச்சி தரும். அத்துடன் நுளம்புகள் துளசிச்செடி உள்ள சுற்றாடலில் காணப்படுவதில்லை.
துளசியில், வெண் துளசி, கருந்துளசி என்ற இருவகை பிரசித்தமானவை. இவற்றுள் கருந்துளசியே மிகச்சிறந்ததாக சொல்லப்படுகிறது.துளசி ஊறப் போட்ட தூய நீரை உட்கொண்டு வந்தால் இருதய நோய்கள் குணமாவதுடன் இருதயமும் வலிமை பெறும். கோவில்களில் துளசி கலந்த புனித நீர் தீர்த்தமாக விநியோகிப்பதை நாம் அறிவோம்.
ஹரி பக்தி சுதோயம் என்னும் நூலில் துளசியின் மகிமை பற்றி விரிவாக சொல்லப் பட்டுள்ளது.
துளசி இலையின் நுனியில் நான்முகனும், மத்தியில் திருமாலும், அடியில் சிவனும், மற்றைய பகுதிகளில் பன்னிரண்டு ஆதித்யர்களும், பதினோரு ருத்திரர்களும், எட்டு வசுக்களும், இரு அசுவினி தேவர்களும் எழுந்தருளியிருப்பதாக கூறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த துளசி செடியை வணங்கிவந்தால் இவர்களை வணங்கியதற்க்கு சமமாகும் என்றும் சொல்லப் பட்டுள்ளது.
பஞ்ச பாத்திரத்தை பற்றி மூன்று விதமான விவரங்களை பின்வருமாறு கூறப்படுகிறது.

இல்லங்களில் பூஜையின்பொது ‘ பஞ்ச பாத்திரம் ‘ என்ற பாத்திரத்தை பயன்படுத்துவதைப் பார்த்திருப்போம்.
அதன் இயற் பெயர் ‘பஞ்ச பத்ர பாத்திரம்’ என்பதாகும். அதாவது ஐவகை பத்திரங்களை(இலைகள்) நீரில் இட்டு, அந்நீரை குறிப்பிட்ட ஒரு பாத்திரத்தில் விட்டு, உத்திரிணி என்ற சிறு கரண்டியால் நீரை எடுத்து பூஜைக்குப் பயன்படுத்துவதால் அப்பெயர்.துளசி, அருகு, வேம்பு, வில்வம், வன்னிஆகிய இலைகளே பஞ்ச பத்திரங்கள்.
இந்த பத்திரங்களும் நீரும் விடப்படும் பாத்திரம் ‘பஞ்ச பத்ர பாத்திரம்’.
இதுவே காலப்போக்கில் மருவி பஞ்ச பாத்திரம் என்றானது.
இந்த மூலிகைகள், தெய்வீகமானவை; பூஜைக்கு சிறந்தவை. சிறந்த மருத்துவ சக்திகளை கொண்ட இந்த மூலிகைகள், தெய்வீகமானவை; பூஜைக்கு சிறந்தவை.
இந்த ஐந்து இலைகளையும் இறைவனுக்கு அர்ப்பணித்து தீர்த்தம் விடுவதாலேயே அந்த பாத்திரம் பஞ்ச பத்ர பாத்திரம் என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமானுக்கு உகந்த இலை வில்வம்,
திருமாலுக்கு உகந்தது துளசி,
அம்மனுக்கு வேப்பிலை,
விநாயகருக்கு அருகம் புல்,
பிரம்மனுக்கு அத்தி இலை சிறப்பானது.
 பூசையில் அர்க்கியம், பாத்தியம், ஆசமனீயம், ஸ்நானீயம், சுத்தோதகம் என்பவைகளுக்கு உபயோகிக்கப்படும் ஐந்து நீர்வட்டில் விளக்கம்
பஞ்சபாத்திரம் = பஞ்ச+ பாத்திரம்
பயன்பாடு பெருமாள் கோவில்களில் ஐந்து  பாத்திரங்களில் பெருமாள் முன் இருக்கும் நீரில் ஒன்றைத்தான் நமக்குத் தருகிறார்கள்.
அர்க்கயம் கைகளுக்கு, பாத்யம்  பாதங்களுக்கு, ஆசமனீயம் – இது ஆசமனம், ஸ்நானீயம்  திருமேனிக்கு, சர்வார்த்த தோயம்  மற்ற அனைத்துக்கும். இவை தான் பஞ்ச பாத்திரங்கள்.
இவை இல்லாமல் தண்ணீர் முகந்து வைக்க இன்னொரு பெரிய பாத்திரம், தரையில் இருக்கும். அதில் இருந்து நீர் எடுத்து தான் இந்த பாத்திரங்களுக்கு நீர் விடுவார்கள்.
 நமக்குக் கொண்டு வந்து கொடுக்கும் தீர்த்தம், சர்வார்த்த தோயம் என்ற அந்த ஐந்தாம் பாத்திரத்தில் இருந்து. அது தான் நடுவில் வைக்கப்பட்டு இருக்கும்.
மற்ற அனைத்தின் நீரும் இந்த ஐந்தாவதில் இருந்து தான் போயும், வரவும் செய்யும்.
தீர்த்தங்களில் பெரும்பாலும் இடப்படும் பொருட்கள் பின்வருமாறு பார்க்கலாம்.
பச்சைக் கர்ப்பூரம்
ஏலக்காய், இலவங்கம்
ஜாதிக்காய், வெட்டிவேர்
இவற்றுடன் சிறிது மஞ்சள்.
இங்கு பஞ்சமுகம் என்பதற்கு அர்த்தமே வேறு.
வியாகரண சாஸ்திரப்படி பஞ்ச என்றால் விஸ்தாரம் என்று பொருள்.
முகம் மாத்திரம் நன்றாக விரிந்து பெரியதாகவும் உடம்பு ஒடுங்கி சிறுத்தும் இருப்பதால் இதற்கு பஞ்சமுகம் என்று பெயர்.
அதேபோல் பூஜைக்கு உபயோகிக்கும் பஞ்ச பாத்திரத்தின் தலைப்பாகம் விரிந்தும் உடல் சிறுத்தும் இருப்பதனால் அதனை பஞ்சபாத்திரம் என்று கூறிப்பிடப்படுகிறது.

                                                                                      – கே.வி. வேணுகோபால்

                                                                                                  

Learn Stotras, Divya Prabandham, Sanskrit and Nithya Karma

EVENTS

Local   Temple   NRI   Pontiffs’ Tour