Paramparaa – The Tradition Continues….

ஆண்டவனின் கிருபையால் தீமையும் நன்மைக்கே

மனிதர்கள் தாங்கள் தண்டீக்கப்படுகிற போது கடவுளைக் கடிந்து கொள்கிறார்கள். கடவுள்
காரணம் இல்லாமல் தண்டனை
கொடுப்பதில்லை. பின்னால் வரக்ககூடியவற்றை அறிந்தே
அவ்வாறு செய்கிறார். உதாரணத்திற்க்கு, ஒரு மனிதன் வண்டி
ஒட்டி செல்லும் போது விபத்துக்குள்ளாகி இரண்டு கால்களையும்
இழந்தார். அதற்கு பதிலாக மரக்கால்களைப் பொருத்திக்
கொண்டார். அவர் ஒரு முறை ஆஸ்திரிலேயாவுக்கு சென்றார்.
ஒரு முறை வனப்பகுதிக்கு செல்லும் போது அங்குள்ள
காட்டுவாசிகள் அவரை கடத்திச்சென்றனர். அவர்களின்
தலைவன். “இன்று நமக்கு நல்ல வேட்டை. இவனை உண்டு
மகிழ்வோம். அவன் கை, கால்களை வெட்டி சூப் போடுங்கள்” என
கொக்கரித்தான்.

தலைவனின் ஆட்கள் அந்த மனிதனின் கால்களை வெட்ட
முயன்றபோது உள்ளே எதோ கடினமான பொருள் இருப்பதை
பார்த்தனர். அங்கு காலுக்கு பதிலாக் கட்டை இருந்ததை பார்த்து
பயந்து போனார்கள். அதிர்ச்சியடைந்த அவர்கள் தங்களது
தலைவனிடம் வாலிபனின் காலிற்குள் ஏதோ கட்டை இருப்பதாக
கூறினர். தலைவனும் ஏதும் புரியாமல் மனிதனிடம் வந்து
பார்த்தான். அப்போது அவனுக்கும் பயம் உண்டானது. தாங்கள்
கடத்தி வந்திருக்கும் மனிதன் சாதாரண ஆள் அல்ல என்றும்,
எதோ தெய்வப்பிறவி என்றும் நினைத்தனர்.


தலைவன் காட்டுமிராண்டிகளிடம் மனிதனின் கால்கள்
தங்களைப் போல் இல்லாமல் வித்தியாசமாக இருக்கிறது. இவர்
ஏதோ ஆண்டவன் போல் இருக்கிறார். ஆகவே, இவரை வெட்டி
விடாதீர்கள், என்று கூறி அந்த மனிதனையே தனது தலைவராக
ஏற்றுக் கொண்டான். இதன் மூலமாக தெரிவது என்னவென்றால்,
நாம் பலவீனமாக நினைக்கும் சில விஷயங்க்ள் கூட கடவுளின்
கருணையால் நன்மையே பயக்கின்றன. எல்லா மனிதர்களுமே,
“நமக்கும் மேலே ஒருவனடா, அவன் நாலும் தெரிந்த
இறைவனடா”, என்ற பாடலை எழுதிய கவிஞர் கண்ணதாசனின்
பாட்டை நினைவில் கொள்ள வேண்டும்.

Learn Stotras, Divya Prabandham, Sanskrit and Nithya Karma

EVENTS

Local   Temple   NRI   Pontiffs’ Tour