Paramparaa – The Tradition Continues….

சிறப்பு மிக்க ஆஞ்சநேயர் கவசம்

ஸ்ரீ ஆஞ்சநேயர் கவசத்தை தினமும் காலை பூஜையறையில் 108 தடவைகள் சொல்ல வேண்டும். இதனால் மனபயம் அகலும். காரியங்கள் கைக்கூடி நன்மை அளிக்கும். தவிர, ஸ்ரீ ராமஜெயத்தையும் பல முறைகள் கூறினால் பக்தர்களுக்கு நன்மை பயக்கும் எனக் கூறப்படுகிறது. ஓம்’ என்று தொடங்கி `போற்றி’ என்று முடிக்க வேண்டும். ஒவ்வொரு தடவையும் பூ இதழ்களை அனுமன் படத்தின் மீது போட்டு அர்சிக்க வேண்டும். இதனால் குடும்பத்தில் நோய் நொடி இருந்தால் அகலும். மனபயம் இருப்பின் அகலும். காரியங்கள் கைக்கூடி நன்மை அளிக்கும் எனக் கூறப்படுகிறது. மகிமை மிக்க இந்த 108  ஆஞ்சநேயர்  போற்றி ஸ்லோகங்களை பின்வருமாறு பார்ப்போமா:-

ஓம் அஞ்சனாதேவி பெற்ற அருமை மைந்தா போற்றி

 ஓம் ஆஞ்சநேயனே எங்கள் இதய தெய்வமே போற்றி

ஓம் இன்னலைத் தீர்க்க வந்த இறைவா போற்றி

ஓம் ஈடு இணையில்லாத வீரதீர இளமையே போற்றி

ஓம் உன்னத வாலை உச்சி உகந்தவா போற்றி

ஓம் ஊறிலா வண்ணம் காக்கும் உத்தமா போற்றி

ஓம் எண்ணரும் கலைகள் வல்லாய் எளிமையே போற்றி

ஓம் ஏற்றமே அருளும் செல்வ மாருதி போற்றி

ஓம் ஐந்தெனும் புலனை வென்ற ஆண்டவா போற்றி

ஓம் ஒண்ணதி வழங்க வல்ல உயர்குணமே போற்றி

ஓம் ஓங்காரம் செய்து துள்ளும் உரிமையே போற்றி

ஓம் ஓளடதம் தேடிச் சேர்ந்த அதிசயம் போற்றி

ஓம் கண்ணுதல் கருதும் செல்வ கண்மணி போற்றி

ஓம் காற்றிகை அருளால் வந்த கடமையே போற்றி

ஓம் கிண்கிணி தண்டை கொண்ட கிளர்ச்சியே போற்றி

ஓம் கீசகன் பகையின் அண்ணன் அனுமனே போற்றி

ஓம் குரக்கினத் தலைமைகொள் துணைவா போற்றி

ஓம் கூரிய சொல்லின் செல்வ சுந்தர போற்றி

ஓம் கெடுதியை களையும் எங்கள் இறைவனே போற்றி

ஓம் கேடுகள் நீக்கும் ஆஞ்சநேயனே போற்றி

ஓம் கைவரு ராம பக்த அனுமனே போற்றி

ஓம் கொடுமையை நீக்க வந்த குமுதமே போற்றி

ஓம் கோடி சூரியப்பிரபை கொண்ட இறைவா போற்றி

ஓம் கௌவையைக்களையும் செல்வ மாருதி போற்றி

ஓம் சங்கடம் நீக்க எண்ணும் சத்தியம் போற்றி

ஓம் சாத்திரம் எல்லாம் கற்ற சற்குணா போற்றி

ஓம் சிந்தனை சிறந்த செல்வ அனுமனே போற்றி

ஓம் சீரிய ஞானதீப மாருதி போற்றி

ஓம் சுந்தரமுகம் கொள்ஞான சூக்குமம் போற்றி

ஓம் சூரியன் மணியான சுடரொளி போற்றி

ஓம் செந்தமிழ் கம்பன் போற்றும் கீர்த்தியே போற்றி

ஓம் சேய்மையில் அண்மையாம் துணைவரே போற்றி

ஓம் சைலமே உறையும் எங்கள் சற்குணா போற்றி

ஓம் சொர்ணமே மேனியான சுந்தரா போற்றி

ஓம் சோகமே தீர்ப்பாய் எங்கள் அனுமனே போற்றி

ஓம் சௌகரியம் சேர்ப்பாய் எங்கள் சஞ்சீவி போற்றி

ஓம் கடாயெனும் பெயர் கொண்ட கண்மணி போற்றி

ஓம் காட்டினில் மலையில் வாழும் கற்பகம் போற்றி

ஓம் கிளிபயில் சோலை எல்லாம் திரிகுவை போற்றி

ஓம் கீண்டினை அசுரர் மாளக் கீர்த்தியே போற்றி

ஓம் குறைவறு கல்வி ஞானம் படைத்தனை போற்றி

ஓம் கூறு சொல் தன்னின் செல்வன் சுந்தரன் போற்றி

ஓம் கெடுதியைச் சாய்த்து நீக்கும் அனுமன் போற்றி

ஓம் கேடறியாத தூத இறைவனே போற்றி

ஓம் கைநகம் வஜ்ரமான கண்மணி போற்றி

ஓம் கொள்கையில் உறுதி வாய்ந்த மாருதி போற்றி

ஓம் கோட்டையைத் தாண்டும் செல்வ மாருதி போற்றி

ஓம் கௌபீன் இறைவன் போற்றும் கனகமே போற்றி

ஓம் தண்ணிழல் ஆன எங்கள் புண்ணியா போற்றி

ஓம் தாங்கரும் துயரும் தீர்க்கும் தருநிழல் போற்றி

ஓம் திண்ணிய உரம்கொள் தேகா மாருதி போற்றி

ஓம் தீமையை நீக்கும் செல்வ அனுமனே போற்றி

ஓம் துணிவினில் சிறந்த எங்கள் அனுமனே போற்றி

ஓம் தூய்மை வாய்மை வாய்ந்த மெய்ம்மையே போற்றி

ஓம் தெளிவுறு கேள்வி ஞானம் கிளர்த்துவை போற்றி

ஓம் தேடியே சஞ்சீவி நல்கும் கீர்த்தியே போற்றி

ஓம் தையலாம் சீதை போற்றும் தூதனே போற்றி

ஓம் தொழில் நலம் வலிமை நல்கும் தூயவா போற்றி

ஓம் தோள்வலி மிக்க ராம தூதனே போற்றி

ஓம் தௌமியன் போற்றும் ஞான அனுமனே போற்றி

ஓம் நற்குண சீலரே மாருதி வீர போற்றி

ஓம் நாடிய தரவே வல்லாய் நாயக போற்றி

ஓம் நிச்சயம் பிரம்மச்சரியம் காத்தனை போற்றி

ஓம் நீடிய பகையை நீக்கும் நிறைகுணம் போற்றி

ஓம் நுண்மைகொள் அறிவு கொண்ட மாருதி போற்றி

ஓம் நாலறி புலவ ஞான பானுவே போற்றி

ஓம் நெற்றியில் நாமம் காட்டும் நெறியதே போற்றி

ஓம் நேர்ந்தனை ராம நாமம் தூதனே போற்றி

ஓம் நைந்திடும் நிலைமை நீக்கும் நாயகா போற்றி

ஓம் நொந்திட வண்ணம் காக்கும் நோக்கமே போற்றி

ஓம் நோயினை அண்டா வண்ணம் காக்க நீ போற்றி

ஓம் நௌவிபின் சென்ற இராம தூதரே போற்றி

ஓம் பலநலம் கொண்ட எங்கள் பரமனே போற்றி

ஓம் பாலக வஜ்ர தேகா அனுமனே போற்றி

ஓம் பிலமதில் சென்று வெற்றி சேர்த்தனை போற்றி

ஓம் பிழைகள் நீக்கும் செல்வ மாருதி போற்றி

ஓம் புன்மைகள் தன்னை நீக்கும் புனிதமே போற்றி

ஓம் பூவுடைக் கானம் வாழும் பூரண போற்றி

ஓம் பெருமைக்கொள் உரமே பெற்ற பரமனே போற்றி

ஓம் பேசரு வியாகரணம் பிறவெலாம் கற்றாய் போற்றி

ஓம் பைம்பொழில் திரியும் அன்பே அனைத்தும் போற்றி

ஓம் பொறுமை கொள் அறத்தின் தூத புண்ணியா போற்றி

ஓம் போயினை வென்றாய் நன்றாய் பூரண போற்றி

ஓம் பௌவமே தாவிப் பாயும் பரமனே போற்றி

ஓம் எக்குலத் தாரும் போற்றும் இறைவனே போற்றி

ஓம் எங்ஙணும் நீயே உள்ளாய் இறைவனே போற்றி

ஓம் அச்சரத்தால் வாலி அழிந்திடச் செய்தாய் போற்றி

ஓம் அஞ்சனை செல்வ அரிய செம்மணியே போற்றி

ஓம் திட்டமாய் செயல் செய்யும் தினகரன் தூத போற்றி

ஓம் திண்ணமாய் வெற்றி தரும் ஆஞ்சநேயனே போற்றி

ஓம் எத்திறம் தனிலும் வல்ல இனிய மாருதியே போற்றி

ஓம் எந்தையர் சிந்தை வாழும் இறைவ மாருதியே போற்றி

ஓம் எம்மருங்கினிலும் வாழும் இறைவா போற்றி

ஓம் எப்பரம் பொருளும் வாழ்த்தும் இனியவா போற்றி

ஓம் எவ்வனம் செலினும் உய்வன சொல்வாய் போற்றி

ஓம் எய்திடும் இனிமை எல்லாம் இயற்றுவை போற்றி

ஓம் இல்லற ராம தூதன் எங்கள் மாருதியே போற்றி

ஓம் நள்ளிரா தன்னில் காக்கும் காலசஞ்சீவி போற்றி

ஓம் ஆழ்கடல் கடந்த வஜ்ர தேகனே இறைவா போற்றி

ஓம் பாற்கடல் பிறந்த மாது பரிவுறும் கடமை போற்றி

ஓம் மார்பினை பிளந்து மாயன் மகத்துவம் அளித்தாய் போற்றி

ஓம் பன்னலம் சேர்க்கும் எங்கள் பத்ம தேகனே போற்றி

ஓம் நன்னயம் சேர்க்கும் எங்கள் இராம தூதனே போற்றி

ஓம் பொன்னவிர் அஞ்சனை தந்த புதுமையே போற்றி

ஓம் நூற்கடல் கடந்த எங்கள் நுண்மையே போற்றி

ஓம் நாற்பயன் விளைக்கும் எங்கள் நாயகா போற்றி

ஓம் பாற்படு பொருளில் எல்லாம் படர்ந்தனை போற்றி

ஓம் போற்றியே அனும போற்றி பூரணா போற்றி போற்றி.

மேற்கொண்ட ஸ்லோகங்களை சொல்லிவிட்டு ஸ்ரீ ராமஜெயம் எனக் கூறி முடிக்க வேண்டும்.

Learn Stotras, Divya Prabandham, Sanskrit and Nithya Karma

EVENTS

Local   Temple   NRI   Pontiffs’ Tour