தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி – 1 கப்
வெண்ணைய் – 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 2 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் – 4
புதினா – சிறிதளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
வெங்காயம் – 1
உப்பு – தேவையானது
செய்முறை :
• வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
• பாசுமதி அரிசியை நன்றாக கழுவி இரண்டு கப் தண்ணீரில் 30 நிமிடம் ஊறவைக்கவும்.
• குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் வெண்ணைய் போட்டு உருகியதும் சீரகத்தை போடவும். சீரகம் பொரிந்ததும் அதனுடன் நறுக்கிய பச்சைமிளகாய், புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவேண்டும்.
• அதில் ஊறவைத்த அரிசியில் தண்ணீரை நன்றாக வடித்து விட்டு போட்டு சிறிது கிளறவும்.
• பின்னர் அதில் 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து குக்கர் விசில் போட்டு 3 விசில் வந்ததும் இறக்கவும்..
• கடாயில் வெண்ணெய் போட்டு வெங்காயத்தை அதில் போட்டு பிரவுன் கலர் வரும் வரை வறுத்து சீரக சாதத்தின் மேல் தூவி பரிமாறவும்.
• சுவையான ஜீரா ரைஸ் ரெடி.