Paramparaa – The Tradition Continues….

பக்தர்களுக்கு மரியாதையை புகுத்திய காஞ்சி பெரியவர்

காஞ்சி பெரியவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது விஷயங்கள் பல.  பெரியவர், இளைஞர்கள் , மற்றும்  வயதில் முதிர்ந்தவர்களுடன் பேசும் விதம், அவர்து பாவனை நம்மை சிந்திக்க வைக்கும். அந்த அரிய குணம் எல்லோரிடமும் இருந்தால், முதியோர் இல்லத்திற்கு தேவையே இருந்து இருக்காது. இதற்கு உதாரணமாக பல வருடங்ககளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தை கீழ் கண்டவாறு பார்ப்போமா:-

ஒரு சமயம், சுமார் என்பது வயதுக்கு மேல் இருக்கும் ஒரு  ஒய்வு பெற்ற அரசாங்க அதிகாரி ,  காஞ்சி பெரியவரைபார்க்க வந்திருந்தார். அந்த அதிகாரி, மறைந்த பிரதமர்  திரு.நரசிம்ம ராவ் அவர்கள் கீழ் பணி புரிந்து நாட்டிற்கு பல அரிய சேவைகள் செய்தவர். அவர் உடல் நலக்குறைவின் காரணமாக, (wheel chair)சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு பெரியரை தரிசனம் செய்ய வந்தார். பெரியவர் பூஜை செய்து முடிக்கும் வரை  பொறுமையுடன் காத்திருந்தார். காஞ்சி பெரியவர் அவரை பார்த்தவுடன், அவர் இருக்கும் சக்கர நாற்காலியை நோக்கி நடந்து அவரது அருகாமையில் சென்று நின்று கொண்டார். அந்த முன்னாள் அதிகாரி கஷ்டப்பட்டு எழுந்து மரியாதை செய்ய முயன்றார். அதை உணர்ந்த பெரியவர்அவரை அமர்ந்து கொள்ளும்படி கூறினார். பிறகு, அந்த மாமனிதர், நாட்டிற்காக நீண்ட காலம் ஆற்றிய தொண்டையும், கல்வித்துறையில் அவரின் சேவையை பட்டியலிட்டு பாராட்டினார். சுமார் அரை மணி நேரம், அவர் அருகில் பெரியவர் நின்று கொண்டே பேசிக் கொண்டு இருந்தார். 

அன்றுபெரியவர், வயதில் முதிர்ந்த மூத்தவருக்கு கொடுத்த மரியாதை அங்கிருந்த அனைவருக்கும் ஒரு பாடமாக இருந்திருக்கும். அவரின் நிதானமான பேச்சு, சிரித்த முகம், அனைவருடன் பாரபட்சம் பார்க்காமல் பேசிப் பழகும் குணம்,  மற்றும் யாரையும் குறை சொல்லாத ஸ்வபாவம், மற்றவர்களுக்காக தன் நேரத்தை ஒதுக்கி வைத்து அவர்களுக்கு அனுக்ரகம் செய்தல் போன்றவை பக்தர்களாகிய  நாம் கற்றுக் கொள்ளவேண்டியது. இன்றைய கால கட்டத்தில், நேரம் இல்லை என சாக்கு போக்கு கூறி, மற்றவர்களுக்கு சேவை செய்யாமல் தன சுயநலத்தை மற்றும் பார்க்கும் மக்களுக்கு பெரியவரின் தொண்டு ஒரு பாடமாக அமையும். உழைப்பாளிகளால் நேரத்தை ஒதுக்க முடியும், மனமிருந்தால் மார்க்கம் என்ற கூற்றில், ஆணித்தரமான நம்பிக்கை வைத்திருந்தார் பெரியவர்.

ஒரு முறை மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் பெரியவரை பார்க்க காஞ்சிபுரம் வந்திருந்தார். பெரியவர் பூஜை, புனஸ்காரத்தில் இருந்ததால், எம்.ஜி.ஆர் வெளிப்பிரகாரத்தில் அமர நேரிட்டது.  அதை பார்த்த பெரியவர் இடப் பிரச்சனையால் எம்.ஜி.ஆர் அவதிப்படுவதை பார்த்து அவரிடம் மன்னிப்பு கேட்டார். உடனே எம்.ஜி. ஆர், “இந்த இடத்தில் நீங்கள் தான் முதல்வர். நான் வெறும் ஆசாமி தான். பொறுமையாக காத்திருக்கிறேன்” என்றார். பிறகு, பூஜை முடிந்தவுடன், எம்.ஜி. ஆரை அறையில் அழைத்து, ” தமிழக மக்கள் உன் மேல் மிகுந்த பிரியமும், மரியாதையும் வைத்திருக்கிறார்கள். அவர்களை நீ உயிருள்ளவரை காப்பாற்றுவாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நீ மக்கள் தலைவன் என்பதில் சந்தேகமில்லை” எனக் கூறி எம்.ஜி.ஆரை ஆசிர்வதித்து வழி அனுப்பி வைத்தார். உண்மை தான், பெரியவரின் கூற்றுப்படியே, எம்.ஜி.ஆர் காலத்தை வென்ற தலைவனாகத் தான் இன்றும் தமிழக மக்களின் மனதில் நிற்கிறார்.

காஞ்சி பெரியவருக்கு மற்றவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறியும் சக்தி இருந்தது. ஒருவரை பார்த்த மாத்திரத்தில், அவர் என்ன நினக்கிறார் என்பதை  கூறிவிடுவார். உதாரணத்திற்க்கு, ஒரு முறை மறைந்த துக்ளக் வார பத்திரிகை ஆசிரியர்  சோ ராமசாமி அவர்கள் எதையோ நினைத்துக் கொண்டு அவரை பார்க்க காஞ்சீபுரம் சென்றார். “”என்னை பார்த்த உடனேயே நீ இதை தானே நேற்று மனதில் வைத்துக் கொண்டிருந்தாய்” என கேட்டவுடன், எப்படி நான் நினைத்ததை துல்லியமாக கணித்து விட்டார் என்று ஆச்சரியப்பட்டு வியந்து நின்றேன் என்றார் சோ அவர்கள்.

மறைந்த பிரதமர், இந்திரா காந்தி, 1977-ஆம் வருடம், குறுகிய காலத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு வழி வகுத்து விட்டு, காஞ்சி பெரியவரை பார்க்க சென்ற பொழுது, இந்திராவின் கேள்விகளுக்கு பதில் கூறாமல் மொளனம் சாதித்தார். அதற்கு பதில், நீ இந்த தேர்தலில் படு தோல்வி அடைவாய் எனக் கூறாமல் கூறினார். பிறகு, இந்திரா, 1980-அம் வருடம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னால் அவரை காஞ்சிபுரம் சென்று சந்தித்தபொழுது. தனது வலது கையால் ஆசி வழங்கினார். அந்த தேர்தலில், கை சின்னத்தில் போட்டியிட்ட காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்று, இந்திரா மீண்டும் பிரதமரானார்.

தற்பொழுதைய துக்ளக் ஆசிரியர், குருமூர்த்தி அவர்கள், காஞ்சி பெரியவரை மையமாக வைத்து எழுதிய தனது சுயசரிதையான “அவர் தந்த அனுபவம்”  வார கட்டுரையில்,  1984-ஆம் வருடம், அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் அப்பொழுதைய காங்கிரஸ் அரசின் தலைவரும், பிரதமருமான, இந்திரா காந்தி ராணுவத்தை வைத்து சீக்கிய தீவிரவாதியான ‘சாந்த் ஜெர்னயில் சிங்க் பிந்ரேன் வாலேயையும் அவர் கூட்டாளிகளையும் அகற்றியதை, அன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் முதலாளி, ராம்நாத் கோயங்கா, பிரதமர் தனக்கு கூறிய செய்தியை  தன்னுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டதை  விரைந்து காஞ்சிபுரம் சென்று பெரியவரிடம் ஆரவாரத்துடன் தெரிவித்ததுடன், அவர் புளகாங்கிதம் அடைவார்  என எதிர்பார்த்ததற்கு மாறாக, “நடந்தது, நாட்டிற்க்கு நல்லதில்லையே. சீக்கியர்கள் நம் தாய் நாட்டை காக்க நிறைய தியாகங்கள் செய்திருக்கிறார்களே. அவர்கள் நமது சகோதரர்கள் ஆயீற்றே” என பதலளித்தவுடன், கூனிக் கூருகி போய் , சந்தோஷத்தில், உணச்சிவசப்பட்டு தான் கூறியது எவ்வளு பெரிய தவறு என உணர்ந்ததாகவும், பொருளாதாரத்திலும், சட்டத்துறையிலும் வல்லவரான குருமூர்த்தி பெரியவரின் மகோன்னதத்தையும், புத்தி கூற்மையையும் விளக்கியிருந்தார். இப்படி காஞ்சி பெரியவரின் மகிமையை பற்றி கூறிக் கொண்டே போகலாம்.

கே.வி. வேணுகோபால்

Learn Stotras, Divya Prabandham, Sanskrit and Nithya Karma

EVENTS

Local   Temple   NRI   Pontiffs’ Tour