Paramparaa – The Tradition Continues….

பாரம்பரியத்தை இன்றும் பின்பற்றும் பொங்கல் பண்டிகை

மார்கழி மாதம் பிறந்ததுமே, தமிழக மக்கள் பொங்கல் பண்டிகைக்கு தயாராகி விடுவார்கள். இந்த புகழ் பெற்ற பண்டிகை தமிழர்களின் கலாசாரத்தை, பாரம்பரியத்தை பறைசாற்றும் பண்டிகை. பண்டிகைகளின் கொண்டாட்டம் மாறி வரும் நிலையில், பொங்கல் பண்டிகை மட்டும், பாரம்பரிய முறையிலே கொண்டாடைபடுக்கிறது. பொங்கள் பானைக்கு, சந்தனம், கும்குமம் வைத்து, மஞ்சள் கிழங்கை இலையோடு பானை கழுத்தில் கட்டப்படும்.  புத்தரிசியை மண் பானையில் வைத்து சர்க்கரை பொங்கல் செய்வது மரபு. கிராமப்புறங்களில் முன்பு, பொங்கல் செய்வதற்கு களி மண்ணில் தனியே மூன்று உருளைகளை உருவாக்குவர், அவற்றுக்கு வண்ணமிட்டு, அதை அடுப்பாக பயன்படுத்துவர்.

பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள், போகி பண்டிகை,. தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு, ‘போகி’ என்றொரு பெயர் உண்டு. “மழையே, மழையே வா, வா, வாய்க்கால் வரப்பு செழிக்க வா, வா, ஆடு, மாடு மேய வா, வா,” என, மழையை வரவேற்று கிராமப்புற மக்கள் பாடுவது வழக்கம். ஏனெனில், மழை பெய்தால்

 தான் பயிர்கள் செழிக்கும்; ஊயிர்கள் வாழும். எனவே, அனைத்திற்கும் தேவையான மழையை பொழியும் வருண பகவானின் அதிபதியான இந்திரனை மகிழ்விக்க, இந்திர விழா கொண்டாடப்பட்டது; அதுவே, நாளடைவில் போகி பண்டிகையாக மாறியது.

பொங்கல் வைத்த பிறகு, சிலர், கோவில்களுக்கு செல்வர்; உறவினர் வீடுகளுக்கு செல்வர். அனைவம் அன்று ஒன்றாக அமர்ந்து பொங்கல் சாப்பிடுவது ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியான உணர்வை தரும். பொங்கல் பண்டிகைக்கு மறு நாள் மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. வேளாண் மக்களுக்காக உழைக்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் தினமாக மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை பெரும்பாலும் கிராமங்களிலே கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், மாடுகளின் கொம்புகளில் வர்ணம் பூசி, காலில் சலங்கை  கட்டி, வீரநடை போட்டு நடக்க வைப்பர்; வாழைப்பழம் மற்றும் காய்கறிகள் வழுங்குவர்.

அதற்கு அடுத்த நாள் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மற்ற விஷேச நாட்களை. போலவே. மக்கள் புத்தாடை அணிந்து, சுற்றத்தாரையும், நண்பர்களையும் பார்த்து மகிழ்வது வழக்கம்; பெரும்பாலனோர் சுற்றுலா செல்வர். ஆடிபட்டம் தேடி விதைப்பது தமிழர் மரபு. அவை தை மாதம் பிறப்பதற்கு முன் அறுவடையாகிறது. சூரிய வழிபாட்டுக்கு பின், சர்க்கரை பொங்கலை மக்கள் சுவைப்பர். அருகில் உள்ள வீடுகளுக்கு கொடுத்து மகிழ்வர். அதன் பின் அனைத்து வித காய் கறிகளுடன், மதியம், வெண் பொங்கல் சாப்பிடுவார்கள். பெரும்பாலும் வீட்டின் வயில் முன்புறம் பொங்க பானையை  பொங்க விடுவர். குலவை சத்தத்தை வைத்தே, எந்த வீட்டில் பொங்கல் பொங்கியுள்ளது என்பதை அருகில் வசிப்போர் கூறுவர்.

ஜல்லிகட்டு என்ற பிரபல விளையாட்டும், இந்த  பொங்கல் நன்னாளிலேயே நடத்தப்படுகிறது.

Learn Stotras, Divya Prabandham, Sanskrit and Nithya Karma

EVENTS

Local   Temple   NRI   Pontiffs’ Tour