ஆவியூரின் பெருமை பற்றி மனம் திறந்து பேசுகிறார், சென்னை பெசன்ட் நகரில் அமைந்திருக்கும் அஷ்டலஷ்மி திருக்கோவில் அர்ச்சகர் ஆவியூர் லட்சுமி நாராயணதாசன். கவிதை வடிவத்தில் அவர் இறைவனைப் பற்றி பேசியதை கீழ்கண்டவாறு பார்ப்போமா:
வான் கருமேகம் குளிர்ந்தூவி மழை பெய்யும் கான க்ருங்குயில் கூவி கழனியெல்லாம் ஒலி செய்யும் வானின் வரம் பெற்று தென்பெண்ணை தவழ்ந்தோடும் ஆற்றின் கரையெல்லாக் யோகிகளின் கதை கூறும்.
நவநீதம் கை வைத்து மென்மை பூ இதழ் மேல் கால் வைத்து தேவையில்லா பற்றறுத்து தன் பாதம் நமக்களித்த கோபால விம்சதியில் கோவிந்தன் புகழ்பாட – தான் வேதாந்த தேசிகன் முன் தோன்றி அருள்புரிந்த ஆவியூர்.
பூமி வாய் பிளந்து கொத்தாய் உள்வாங்கும் – கடல் பொங்கி கரை உலவும், உயிரையெல்லாம் சவமாய் உண்டமிழும் விஞ்ஞானம் பலவழியில் நம்மை
பழிவாங்கி – முடிவு கூறும் நிலையில் மெய்ஞானக் கண்ணால், ஆவியூர் கண்ணா. உனைக் கண்ணாரக் கண்டால் என் ஆன்மா உன்னுள் அடங்கி பிறவா முக்தி நிலை பெரும் பயனை பெற வைக்கும்.
கண்ணன் கழவினைகள் கடைதேறும் வழியன்றோ; பிஞ்சுக் கழலினையே தான் தூக்கி வா, வா என்றழைக்கும் அற்புத காட்சி கொண்ட ஆவியூர் தான்
கருவண்ணன் கழல் சேரும் முக்தியன்றோ. பிறவி பெருங்கடலின் பேரவையில் உருண்டோடும் — நாம் ஆவியூர் காண்ணன் கழலினையை பற்றி பரமபதம் சேர்வோமே.
இம்மையிலும் மறுமையிலும் உயர்ந்து அதை பெற நினைத்தால் தென்பெண்ணை கரை ஒதுங்கி கண்ணனை கைதொழுது கண்ணீர் கசிந்துருகி அடைக்கலம் நீ என்றே அன்பாய் நின்றிருந்தால் பிறவா பெருநிலையை ஆவியூர் மண் கொடுக்கும்.
ஆற்றுப் படுகையிலே அவதரித்த ஆச்சாரியன் (தேசிகன்) உலகுண்ட பெருவாயனுடன் அலங்கரிக்க நூற்றெட்டில் மூன்று பங்குக்கு மல் தெரிவித்த – கலியன் தன்னுடனே உலகுய்ய வரம் செய்ய்யும் அற்புத திருத்தலமே ஆவியூர்.
மூர்த்தி சிறிதானாலும் அறன் கீர்த்தி யாரரிவார்? பலன் பெறுவீர்– என அழைத்து அமுதம் இதுஎன்றோம் — உன் விதி ப்ரோத்தம் இதுவென்றால் ஆவியூர் மண் மிதித்து தென்பெண்ணையில் தலை நனைத்து பாபப் பிணி தொலைத்து இரு கை கூப்பி அவன் பாதம் பற்றிடுவோம். முக்தி நிலைபெற்றிடுவோம்.
இந்த கோவிலை பற்றி மேலும் விவரம் அறிய விரும்பும் பக்தர்கள் கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஆவியூர் லட்சுமி நாராயணதாஸன்
அர்ச்சகர்,
அஷ்டலஷ்மி திருக்கோவில்
11/4, பாரி தெரு, கலாஷேத்ரா காலனி,
பெசண்ட் நகர்,
சென்னை – 600 0 90
தொலைபேசி: 24902294
மொபைல்: 9445106523
- கே.வி. வேணுகோபால்