லட்சுமி பூஜை இல்லாமல் தீபாவளி இனிக்குமா? இந்த மகத்தான திருநாளில் நாம் செய்யும் பூஜையின் மூலம் சகல ஐஸ்வர்யங்களையும் பெற முடியும். அதில் மிக முக்கியமான பூஜை லட்சுமி குபேர பூஜை. செல்வ வளங்களை வழங்கிடும் மகாலட்சுமியையும், நவநிதிகளையும் வைத்துள்ள குபேரரையும் ஒரு சேர பூஜை செய்வதன் மூலம் நமது செல்வ நிலை உயரும். தரித்திரம் நீங்கும். இதற்கு மிகவும் உன்னதமான நாள் தீபாவளி திருநாள். தீபாவளி அன்று தான் மஹா விஷ்ணு லட்சுமியிடம் வந்து வைகுண்டத்தில் சரணடைந்தார் என கூறப்படுகிறது.
மஹாலட்சுமியை துதிப்பவர்கள் செல்வத்திற்கு அதிபதியாக இருப்பார்கள் என பக்தர்கள் நம்புகிறார்கள். இந்தியா முழுவதும் தீபாவாளி அன்று லட்சுமியை பல மாநிலங்களில் வெவ்வேறு விதமாக கொண்டாடுகிறார்கள். குறிப்பாக, மஹாராஷ்டராவில், கணபதியுடன் சேர்த்து, லட்சுமியை பிரமாதமாக கொண்டாடுவார்கள், தீபாவளியன்று. முஹரட் ட்ரேடிங்க் தீபாவளி அன்று லட்சுமி பூஜையாக கொண்டாடுவார்கள் வணிகர்கள் வியாபாரத்தில் தங்கள் செல்வம் தழைப்பதற்கு. வடநாட்டில், தீபாவளி பண்டிகை லட்சும் இல்லாமல் இல்லை. அதுவும், சத் பூஜையை லட்சுமி பூஜையாகவே நினைத்து கொண்டாடுவார்கள். மேற்கு வங்கத்திலும், ஒடியாவிலும், தீபாவளி அன்று லட்சுமியை காளியாக நினைத்து பூஜை செய்வார்கள். குஜராத்திற்கு அதிபதியே தாயார் லட்சுமி தான் என்று கூறினால் மிகையாகாது.
லட்சுமி குபேர பூஜை செய்யும் முறையை பின்வருமாறு பார்ப்போமா:
சிறப்பாக முறையான லட்சுமி குபேர பூஜை என்பது வேத மந்திரங்கள் ஓத கலசம் வைத்து செய்யப்பட வேண்டும். சாதாரணமாக வீட்டில் நாமே செய்வது என்றால் பூஜை மாடத்தில் லட்சுமி குபேர படத்தினை வைத்து இருபக்கமும் குத்து விளக்கு ஏற்ற வேண்டும். இப்படத்திற்கு முன்பு பெரிய வாழை இலை வைத்து அதில் நவ தானியங்களை தனித்தனியாக பரப்பி வைக்க வேண்டும். நடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சொம்பை வைத்து அதில் மஞ்சள் கலந்து பின் மாவிலை சொருகி அதன்மேல் ஓர் மட்டை தேங்காய் வைத்திட வேண்டும். அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து பூக்களால் அலங்கரித்து வேண்டும்.
பின் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து பூஜையை ஆரம்பித்திட வேண்டியதுதான். நமக்கு தெரிந்த விநாயகர் துதி மற்றும் பாடல்களை பாடி பூஜையை செய்ய வேண்டும். பின் மகாலட்சுமியை வணங்கி போற்றி வழிபட வேண்டும். அதன்பின் குபேர மந்திரங்களான “குபேராய நமஹ” “தனபதியே நமஹ” என 108 முறை சொல்லி தாமரை பூக்களால் பூஜிக்க வேண்டும். தாமரை மலர் லட்சுமி மற்றும் குபேரனுக்கு உகந்த மலர்.
பின் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து பூஜையை ஆரம்பித்திட வேண்டியதுதான். நமக்கு தெரிந்த விநாயகர் துதி மற்றும் பாடல்களை பாடி பூஜையை செய்ய வேண்டும். பின் மகாலட்சுமியை வணங்கி போற்றி வழிபட வேண்டும். அதன்பின் குபேர மந்திரங்களான “குபேராய நமஹ” “தனபதியே நமஹ” என 108 முறை சொல்லி தாமரை பூக்களால் பூஜிக்க வேண்டும். தாமரை மலர் லட்சுமி மற்றும் குபேரனுக்கு உகந்த மலர்.
தீபாவளியன்று லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம் :
அதிகாலை 04.00 மணி முதல் 06.00 மணி வரை
காலை 09.13 மணி முதல் 10.43 மணி வரை
பிற்பகல் 01.13 மணி முதல் 01.28 மணி வரை
மாலை 06.00 மணி முதல் 07.00 மணி வரை
இரவு 08.00 மணி முதல் 09.00 மணி வரை
இந்த பூஜையை செய்வதால் வீட்டில் நிச்சயம் பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வம் பெருகும். அதோடு வீட்டில் நிம்மதியும், சந்தோஷமும் நிலைக்கும். மகாவிஷ்ணுவின் மார்பில் வாசம் செய்யும் மகாலட்சுமி தீபாவளி தினத்தில் நமது இல்லம் தேடி வந்து அருள்பாலிக்கிறாள். தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை செய்வதால் சங்கடங்கள், காரியத்தடைகள் நீங்கும். கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். நம் இல்லத்தில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். அத்துடன் குபேரன் சகல ஐஸ்வர்யத்தையும் வாரி வழங்கிடுவார்.
மகாலட்சுமியின் திருவருளால் அனைத்து செல்வங்களும் அதாவது தனம், தானியம், மக்கட் செல்வம், வீடு, தைரியம், வீரம், அறிவு என அனைத்தையும் பெற முடியும்.
கே.வி. வேணுகோபால்