வினாயகருக்கு யானத்த்லை வந்தது எப்படி என்பதற்க்கு வட மாநிலங்களில் ஒரு
வரலாறு சொல்கிறார்கள். அதாவது, ஒரு நாள் பிரம்மா உயிர்களைப் படைத்துக்
கொண்டிருந்த போது, தொழிலில் சற்று கவனமில்லாமல், தூக்கக் கலக்கத்தில்
கொட்டாவி விட்டார். கொட்டாவி சோம்பலின் அறிகுறி. சோம்பல் வந்து விட்டால்
துன்பமும் வந்து விடும். அந்த கொட்டாவியில் இருந்து ஒரு அரக்கன் பிறந்தான். அவன்
பிரம்மாவிடம் “தாயில்லா பிள்ளையான நான், தங்களின் பிள்ளையாக
விரும்புகிறேன்,” என்றான். பிரம்மா சம்மதிக்கவில்லை. கோபம் கொண்ட அவன்,
“அப்படியானால், நான் கேட்கும் வரத்தையாவது தாருங்கள்,” என்றான். பிரம்மா
சம்மதிக்க, “நான் யாரைக் கட்டித் தழுவிகிறேனோ அவர்கள் சாம்பலாக வேண்டும்,”
என்றான். பிரம்மாவும் வரன் கொடுத்து விட்டார்.
தன்னை மகனாக ஏற்காத பிரம்மாவையே கட்டிப்பிடிக்க முயன்றான். பிரம்மா ஒடி
விட்டார். அந்த அரக்கனுக்கு ‘சிந்தூரன்’ என பெயர் ஏற்பட்டது. தேவலோகத்தில்
பலரையும் கட்டிப்பிடித்து பஸ்பமாக்கினான். தேவர்கள் பரமசிவனிடம் சென்று
முறையிட்டனர். சிந்தூரனைக் கொல்ல சிவன் முடிவெடுத்தார். இன்னிலையில்
மகேஸ்வரன் என்ற மன்னன், சிவாலயத்தில் உள்ள குருவை தினமும் வணங்கி
வந்தான். ஒரு நாள் குரு அவன் முன் தோன்றி, “என்னை வணங்கிய உன் சிரம் இந்த
உலகத்தாரால் வணங்கப்படும்,” என வரமளித்தார். அந்த நல்ல நாளுக்காக அவன்
காத்திருந்தான்.
ஒரு நாள் தன் பரிவாரங்களுடன் அந்த மன்னன் வீதியுலா சென்ற போது, அவ்வூருக்கு
நாரதர் வந்தார். மகேஸ்வரன் அவரை வரவேற்கவில்லை. கோபமடந்த நாரதர் அவனை
யானைத்தலையுடன் திரியும்படி சபித்தார். இதன் பிறகு அந்த மன்னன் அசுர குணம்
பெற்று அட்டகாசம் செய்தான். சிவபெருமான் அவன் சிரத்தை அறுத்தார். உடனே
பிரகஸ்பதியிடம் சென்ற வினாயகர், “உங்கள் விருப்பப்படி உங்களால் வரன் தரப்பட்ட
மகேஸ்வரனின் தலையை நான் பொருத்திக் கொள்கிறேன். அவன் தலையுடன் கூடிய
என்னை எல்லோரும் பணிவர்,” என்றார். பின் அந்த தலையை தன் திருமேனியில்
தாங்கி காட்சி கொடுத்தார். அன்று முதல் வினாயகருக்கு க்ஜானனர்(ஆனைமுகன்)
என்ற பெயர் ஏற்பட்டது.
வினாயகர் சதுர்த்தியன்று அந்த ஸ்தோத்திரத்தை படிப்பவர்களுக்கு சகல நன்மையும்
உன்டாகும் எனக் கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் வினாயகர் வழிபாடு பிரிசித்தம்
என்கிறோம். ஆனால் வினாயகரின் தலைநகரம் தமிழகத்தில் இருக்கிறது என்று
அங்குள்ள வினயாகர் கோவில் ஒன்றின் தல வரலாற்றில் இருப்பதாகக் குறிப்பிடுகிறார்
காஞ்சி மகா பெரியவர். மோர்காம் தலபுராணத்தில் தஞ்சாவூர் மாவட்டம் ஸ்வாமிமலை
அருகிலுள்ள திருவலஞ்சுழி வினாயகர் பற்றி உயர்வாக சொல்லப்படுகிறது. இதுவே
பிள்ளயாருடைய ராஜதானி, அதாவது தலைநகரம். இங்கே சன்னிதியில் வலம்புரி
வினாயகரும், மற்றொரு சன்னிதியில் வெள்ளைப் பிள்ளையார் என்னும் இடம்புரி
வினாயகரும் உள்ளனர். எவரி இருக்கும் மண்டபமும், அதிலுள்ள பலகணியும்
வேலைப்பாடு மிக்கவை. ஷோடச கணபதி என்று வினாயகருக்கு மூர்தங்களில்
வடிவங்கள் பதினாறை விசேஷேமாகஸ் சொல்வது போல, எந்த பலகணி பதினாறு
துளைகல் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வெள்ளை வினாயகரை இந்திரன் பூஜை செய்ததால் தான், பாற்கடலில் அமிர்தம்
திரண்டு வந்ததாக சொல்வர். பால் ஏட்டினால் ஆனவர் என்பதால் இவர் வெள்ளை
வெளேரென்று இருக்கிறார். இவருக்கு ‘சுவேத வினாயகர்’ என்றும் பெயர் உண்டு.
‘சுவேதம் என்றால் வெள்ளை’. இந்த பிள்ளையாரை தொடாமல் பூஜை செய்ய
வேண்டும். இங்கு பிரம்மோற்சவம் கூட இவருக்குத் தான் சிறப்பாக நடக்கிறது.
பிரிம்மசாரியான வினாயகர், தம்மை வழிபடும் அன்பர்களுக்கு, காரிய சித்தியும்,
அதற்கான் புத்தியும் அருள்பவர். அதனால், சித்தி புத்தி என்ற பண்புகளை இரு
மனைவிகளாக் சித்தரித்து ‘சித்தி புத்தி வினாயகர்’ ஆனார். அடியார்களின்
இடையூறுகளை அகற்றுவதற்கு வல்லபம்(வல்லமை) வேண்டும். என்வே, பிள்ளையார்
இங்கு வல்லபை என்னும் சக்தியுடனும் இருப்பார். புறாண்த்தின் படி வினாயகரின்
சக்திகளாகிய சித்தி, புத்தி இருவரும் ப்ரம்மனின் புதல்விகள். வல்லபை என்பவள்
மரீஸ்முனிவரது மகள். இப்படி வினாயகரின் மகத்துவதைப் பற்றி கூறிக்கொண்டே
இருக்கலாம்.
— கே.வி. வேணுகோபால்