நெல்லூர் ரங்கநாய்குலப்பேட்டை பகுதியை சேர்ந்த கடாம்பி நரசிம்ஹன் புஸ்தக வியாபாரம் செய்து வருவதோடு சித்திர கலையும் வளர்த்து வருகிறார். இவருக்கு சின்ன வயதில் இருந்தே சித்திரம் வரைவதில் மிக்க ஆர்வம் கொண்ட இவர் தெய்வ பக்தியுடன் தெய்வ உருவாவதை வரைய ஆரம்பித்தார் நிறைய சித்திரங்கள் வரைந்த இவருக்கு இக்கலையை மேலும் சிறப்பிக்க எண்ணி நாம் சாதாரணமாக உபயோகிக்கும் அட்டையை பயன்படுத்தி தன் கலை திறமையை காண்பிக்க எண்ணி அதில் பல கலை வடிவத்தை கொண்டு வந்தார் உதாரணமாக ஸ்ரீவெங்கடேச ஸ்வாமிக்கு அணிவிக்கும் வஜ்ர கிரிடத்தை தயார் செய்தார் மற்றும் பெருமாளுக்கு அணிவிக்கும் திருஆபரணங்கள் அதாவது திருநாமம்,சங்கம்,சக்ரம், கர்ணபத்திரம் ஆகியவற்றையும் கலை உணர்வுடன் அற்புதமாக படைத்தார் இதை மென்மேலும் சிறப்பிக்கும் விதமாக ஸ்ரீ பகவத் ராமானுஜ சஹஷ்ராபதி உற்சவம் சந்தர்ப்பம் முன்னிட்டு அவரின் திருஉருவத்தை 30கிலோ அட்டையை கொண்டு மிகவும் சிறப்பை வடிவமைத்தார் இரெண்டவதாக ஸ்ரீ வேதாந்த தேசிகர் 750 திரு நட்சத்திரம் முன்னிட்டு ஸ்ரீ சுதர்சன சக்கரத்தை20 கிலோ அட்டையில் தயார் செய்த்துள்ளார் மற்றும் ஸ்ரீவாரி பாதம் அதனையும் 30கிலோ அட்டையில் செய்து அனைவரது பாராட்டையும் பெற்றுஉள்ளார் இவரது இந்த கலை திறன் ஆச்சார்யன் அணுகிரஹதால் தான் கிடைத்தது என்றும் இந்த திரனால் ஸ்ரீ வேதாந்த தேசிகற்கு சேவை செய்து வருவது Vதனக்கு கிடைத்த மிக பெரிய பாக்யமாவும் கருதி மகிழ்வதாக கூறியுள்ளார் இவரது கலைத்திரனுக்கு இந்தியன் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் விருதினை வழங்கி சிறப்பித்து உள்ளது