Paramparaa – The Tradition Continues….

மஹாலக்ஷ்மியின் மகிமை பக்தர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்

மஹாலக்ஷ்மியின் மகிமையை கீழ்கண்ட ஸ்தோத்திரங்களிலும், மற்றும் அதன் விளக்கங்களிலும் பார்ப்போமா:-

ஸ்ரீ ஸ்துதி

ஆர்த்த த்ராண வ்ரதபிரம்ருதாஸார நீலாம்புவாஹை

அம்போஜாநா முஷஸி மிஷதாம் அந்தரங்கை ரபாங்கை:

யஸ்யாம் யஸ்யாம் திசி விஹரதே தேவி த்ருஷ்டிஸ் த்வதீயா

தஸ்யாம் தஸ்யாமஹமஹமிகாம் தந்வதே ஸம்பதோகா:

மஹாலக்ஷ்மியே, துன்பமடைந்தவர்களை காப்பதயே விரதமாய்க் கொண்டவளே அமுதத்தை போல் பொழிகின்ற கருமேகம் நீயே. காலையில் மலர்கின்ற தாமரையை ஒத்த கண்களை உடைய உன்னுடைய கடைக்கண் அருள் எந்த எந்த திசையில் எல்லாம் விழுகிறதோ அந்தந்த இடத்தில் செல்வங்களாகிறது  நான் போகிறேன், நான் போகிறேன் என்று போட்டியிடுகிறது. இதனால்  எல்லையற்ற செல்வங்களை தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் என அனைவருக்கும் அருள்வது பிராட்டியின் சிறிய கடைக்கண் பார்வை.

பிராட்டியை சரணமடைந்தவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம். இவ்வுலகில் பிராட்டியிடம் இவ்வுலகத்தில் கிடைக்கப்படும் செல்வங்களும், வயதையும், நல்ல ஆயுளையும், எவன் பிராட்டியிடம் சரணம் அடைகிறானோ, அதாவது ஆசார்யர்கள் மூலம் சரணமடைகிறேனோ,  அவர்கள் பிராட்டியின் சிபாரிசை கேட்ட எம்பெருமானால், இருவராலும் சேர்ந்து ஏற்கப்பட்டு, பெரிய துக்கமில்லா ஆனந்த பதமாகிற ஸ்ரீவைகுண்டம் கிட்டுகிறது.

முன் கூறிய இரண்டு ஸ்லோகங்களால் பிராட்டியின் பிரஸாதத்தை அவமதித்த இந்திரன், தேவர்கள், ஐராவதம் என்ற யானையும்  மறுபடியும் அனைத்து செல்வத்தையும் பெற்றனர்.

ஸ்ரீராமாயணத்தில் காகாசுரன்(இந்திரனின் மைந்தன்)  ஸீதையிடன் அவளின் திருமார்பை தீண்டி மிகப் பெரிய பாபம் செய்யப்பட்டது. ஆனால் அக்காக்கை மறுபடியும் பிராட்டியிடமும், மிகுந்த கோபங்கொண்ட எம்பெருமானையும் சரணமடைந்தது, எந்த தேவர்களாலும் அவனுக்கு அடைக்கலம் கொடுக்க முடியவில்லை என்ற காரணத்தால். இப்படி பெரிய அபராதம் செய்தவனையும் பிராட்டி மன்னித்து எம்பெருமானை ஏற்க வைப்பாள்.

அம்மாவானவள்  நாம் தவறு செய்தாலும் தான் அவற்றை மன்னித்து, தந்தையையும் மன்னிக்க செய்து நமக்கு வேண்டுவதை பெற்றுதருவது போல் பிராட்டியும் நமக்கு இவ்வுலக செல்வங்களையும், மோக்ஷத்தையும், ஸ்ரீவைகுண்டத்தில் செய்யும் கைங்கர்யத்தை, தருகிறார் என்பது தான்  நிதர்சனாமான் உண்மை.

Learn Stotras, Divya Prabandham, Sanskrit and Nithya Karma

EVENTS

Local   Temple   NRI   Pontiffs’ Tour