Paramparaa – The Tradition Continues….

கைங்கரியத்தின் மகிமையை உணர்த்துகிறது ஜி.எஸ்.பி.கே

 சமீபத்தில் 46-ஆம் பட்ட அகோபில மடத்து ஜீயர் அழகிய சிங்கர், ஜி.எஸ்.பி.கே நிறுவனர் பார்த்த என்ற பார்தசாரதியின் அன்புக் கட்டளையை ஏற்று, அவர்கள் சென்னை மடத்தில் உள்ள சேலையூரில் வேத பண்டிதர்களையும், மற்றும் அறிஞர்களையும் கொளரவித்து பரிசு வழங்கிய விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அந்த விழாவில் கலந்து கொண்டவர்களைஆசிர்வதித்து கொளரவித்தார். ஜி.எஸ்.பி.கே எப்படி தோன்றியது என்பதை பின்வருமாறு பாப்போமா:-

அகில உலக ஸ்தோத்திர பாராயண கைங்கரியம் சிங்கப்பூர் நாட்டிலிருந்து அரிய சேவைகளை செய்து வருகிறது. ஜி.எஸ்.பி.கே என அழைக்கப்படும் இந்த கைங்கரிய சேவையை செவ்வனே செய்து வருகிறார்கள் பக்தர்கள். சனாதன தர்மத்தை நமக்கு அருளிய பகவத் ராமானுஜாசரயையும், அதை வழி நடத்திய ஸ்வாமி நிகமாந்த மஹாதேசிகனையும் முன்னிட்டு இந்த மகத்தான சேவையை நடத்துகிறார்கள். 2020-அம் வருடம், மார்ச் மாதம் ஆரம்பித்த ஜி.எஸ்.பி.கே., 18-மாதத்திற்க்குள் உலக அளவில் தங்களை கொண்டு சென்றது. பல திறமை மிக்க, மற்றும் புகழ் பெற்ற அறிஞர்களையும், 4000-ஆம் திவ்விய பிரபந்தத்தை கரைத்துக்குடித்த வேத பண்டிதர்களையும் கொண்டு, பக்தர்களுக்கு சமஸ்கிருதத்தில் உள்ள புராணங்கள், மற்றும் இதிகாசங்கள், ஸ்தோத்திரங்களை பாமரர்களுக்கும் புரியும்படி எளிய முறையில் விளக்குகிறார்கள்.

தற்சமயம், ஜி.எஸ்.பி.கே ஏழரை இலட்சம் சந்தாதாரர்களை யூடூயூப் வழியாக தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஒரு நாளைக்கு 15 மணி நேரத்திற்க்கு குறையாம, பக்தர்கள் பார்க்க வழி செய்திருக்கிறது. தவிர, அடுத்த தலைமுறையை ஈர்ப்பதற்காக, சம்பிரதாய மஞ்சரி பாடசாலை, எஸ்.எம்.இ.பி. என்ற பெயரில் நடத்தப்படுகிறது. இது இளமை பருவத்திலிருந்து சிறுவர், சிறுமிகளை சனாதன தர்மத்திற்க்கு தங்களை தயார் செய்து கொள்வதற்க்கு ஊக்குவிக்கிறது. தவிர, இளைஞர்களையும், யுவதிகளையும், பாரதத்தின் தலை சிறந்த பாரம்பரியத்தையும், அதன் மேம்பட்ட கலாசரத்தையும், தகுந்த வழிமுறைகளையும், சரியான நெறிமுறைகளையும் செவ்வனே செய்ய வழிவகுக்கிறது. இது வாழையடி வாழையாக  பின்வரும் தலைமுறைகள் பெருமையுடனும், கொளரவத்துடனும், முறையாக பின்பற்ற வழிவகுக்கிறது.   

ஜி.எஸ்.பி.கே. ஆண்டவன் கொடுத்த இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மாணவ, மாணவியருக்கு, தமிழ், மற்றும் சமஸ்கிருதத்திலும் திறமை மிக்கவர்களை கொண்டு வகுப்புகள் எடுப்பதுடன் நில்லாமல், பெருமை மிக்க, மற்றும் நமது கலாசாரத்தில் ஊன்றிய  நமது கர்நாடக இசையிலும் அவர்கள் பயிற்சி பெற்று மோலோங்க வழி செய்கிறது. தவிர, பரிட்சை வைத்து அதில் தேறும் மாணவ, மாணவியருக்கு , புகழ்வாய்ந்த அறிஞர்கள் நற்சான்றிதழ்கள் வழங்கி கொளரவிக்கிறார்கள்.

ஜி.எஸ்.பி.கே மாதப் பத்திரிகை, ‘சுதர்சனம்’, என்ற பெயரில், செய்தி வடிவத்திலும், மற்றும், கேள்வி, பதில் பாணியிலும் வெளியிடப்படுகிறது. இது மேற்கூறியபடி, சனாதன தர்மத்தையும், ஹிந்து மதத்தின், பெருமமையையும், நம்பிக்கையையும் வலியுறுத்துகிறது.  தவிர, தெய்வ வழிபாட்டு முறைகளையும், தர்ம சம்பிரதாயப்படி, தினந்தோறும், அன்றைய கால வழக்கப்படி, முன்னோர்கள் கூறியபடி நாம் சவரணையாக பூஜை செய்ய வேண்டிய முறைகளை தெள்ளத் தெளிவாக எல்லோருக்கும் புரியும்படி உணர்த்துகிறது.

ஜி.எஸ்.பி.கேயின் வருடாந்தர மார்க்கமாக, சங்கோஷ்டி முதல் இதழ் கடந்த வருடம் வெளியிடப்பட்டது. இதில், தலை சிறந்த அறிஞர்களும், அவர்களை ஆசாரியர்களாக கொண்ட குருக்களும், பக்தர்கள் பராமரிக்க வேண்டிய அணுகுமுறைகளை, அதுவும் கூறிப்பாக, எஸ்.எம்.எ.பி பாடசாலையில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு, நன்றாக விளக்கியிருக்கிறார்கள். வரும்கால சன்னதியினரை மனதில் வைத்தும், சனாதன தர்மத்தை அவர்கள் நிலைநாட்ட வேண்டும் என்ற அக்கறையினாலும்,, ஜி.எஸ்.பி.கே தொடர்ந்து தவறாமல்  திறம்பட பங்காற்றி நமது பழம்பெரும் பாரம்பரியத்தை அடிப்படையாக கொண்ட சாதனைகளை இன்றைய நாகரிகத்திலும், நவீன நுட்பங்களிலும் மூழ்கிய தலைமுறையை நமது வேதத்தின் பக்கம் திருப்பி, அதன் அரும்பெருமையையும், இந்து தர்மத்தின், மற்றும் சனாதன தர்மத்தின்பால் திருப்பி அதன் பெருமைகளை வானளாவ உணர்த்துகிறது எனக் கூறினால் மிகையாகாது.  

                                                                                                                                  கே.வி. வேணுகோபால்

Learn Stotras, Divya Prabandham, Sanskrit and Nithya Karma

EVENTS

Local   Temple   NRI   Pontiffs’ Tour