திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமடலை கீழ்கண்ட பாசுரங்கள் வழியாக பார்ப்போமா?
பாசுரம்-9
உளதென்னில் மன்னுங் கடுங்கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள் அன்னதோர் இல்லியின் ஊடுபோய்.
பாசுரம்-10
வீடென்னும் தொன்னெறிக்கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே. அன்னதே பேசும் அறிவில் சிறு மனத்து
ஆங்கு அன்னவரைக் கற்பிப்போம் யாமே.
வீடு பேறு என்ற ஒன்று உண்டென்னின், எக்காலத்தும் வெப்பம் மிக்க ஒளிக்கதிர்களையுடைய சூரிய மண்டலத்தின் நடுவே சென்று,அங்குள்ள மிகவும் நுணுக்கமான ஓட்டை வழியே, வீடுபேறு என்று சொல்லப்படுகின்ற இடத்துக்குச் சென்றவர்கள் இன்னின்னார் என்று எவரையேனும் அடையாளம் எவராலும்….காட்டுதல் இயலக்கூடிய ஒன்றாகுமோ?
அவ்வாறு- காட்ட இயலாத-நிலையில்வீடு பேறு என்ற ஒன்று உண்டு என்று கூறுகின்ற- பழைய பேச்சுகளையே மீண்டும்-மீண்டும் எடுத்துரைக்கின்ற அறிவற்றவர்களுக்கு எவ்வகையில் நாம் எதனைக்-கற்பிப்பதற்கு-இயலும்?
குறிப்பாக திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம், மற்றும், ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ என்று தினமும் கூறுவது மிக்க நன்மை பயக்கும் என பக்தர்களுக்கு கூறப்படுகிறது. ஆழ்வார்களிலேயே, திருமங்கையாழ்வாறுக்கு என தனி சிறப்பு இருக்கிறது என புராணங்களில் கூறப்படுகிறது. திருமாலே அவரை தன் நன்மைக்காக திருடும்போது, புன்முறுவலுடன் பரீட்சித்து, பிறகு தன் மனைவி லக்ஷ்மியுடன் சேர்ந்து திருமங்கையாழ்வாரைஆசிர்வதித்து, அவரின் கடவுள் தொண்டு மேன்மேலும் சிறக்க வழி செய்தார் எனக் கூறினால் மிகையாகாது.
திருமங்கையாழ்வார் அருளிய பெரிய திருமொழியை பின் வரும் வாக்கியங்களில் கண்டு ரசிப்போம்.
கலையும்கரியும்பரிமாவும் திரியும்கானம்கடந்துபோய்,
சிலையும்கணையும்துணையாகச் சென்றான்வென்றிச்செறுக்களத்து,
மலைகொண்டலைநீரணைகட்டி மதிள்நீரிலங்கைவாளரக்கர் தலைவன்,
தலைபத்தறுத்துகந்தான் *சாளக்கிராமமடைநெஞ்சே.
கடம்சூழ்க்கரியும்பரிமாவும் ஒலிமாந்தேரும்காலாளும்,
உடன்சூழ்ந்தெழுந்தகடியிலங்கை பொடியவடிவாய்ச்சரம்துரந்தான்,
இடம்சூழ்ந்தெங்குமிருவிசும்பில் இமையோர்வணங்கமணம்கமழும்,
தடம்சூழ்ந்தெங்குமழகாய *சாளக்கிராமமடைநெஞ்சே.
உலவுதிரையும்குலவரையும் ஊழிமுதலாவெண்திக்கும்,
நிலவும்சுடருமிருளுமாய் நின்றான்வென்றிவிறலாழி
வலவன், வானோர்த்தம்பெருமான் மருவாவரக்கர்க்கெஞ்ஞான்றும்
சலவன், சலம்சூழ்ந்தழகாய *சாளக்கிராமமடைநெஞ்சே.
ஊராங்குடந்தையுத்தமன் ஒருகாலிருகால்சிலைவளைய,
தேராவரக்கர்த்தேர்வெள்ளம்செற்றான் வற்றாவருபுனல்சூழ் பேரான்,
பேராயிரமுடையான் பிறங்குசிறைவண்டறைகின்ற
தாரான், தாராவயல்சூழ்ந்த *சாளக்கிராமமடைநெஞ்சே.
அடுத்தார்த்தெழுந்தாள்
பிலவாய்விட்டலற அவள்மூக்கயில் வாளால்
விடுத்தான், விளங்குசுடராழி விண்ணோர்ப்பெருமான் நண்ணார்முன்
கடுத்தார்த்தெழுந்த
பெருமழையைக் கல்லொன்றேந்தியின
நிரைக்காத்தடுத்தான் தடம்சூழ்ந்தழகாய *சாளக்கிராமமடைநெஞ்சே.
தாயாய்வந்தபேயுயிரும் தயிரும்விழுதுமுடனுண்ட
வாயான் தூயவரியுருவிற்குறளாய்ச்சென்று மாவலையை
ஏயானிரப்ப மூவடிமண்ணின்றெதாவென்று
உலகேழும் தாயான்
காயாமலர்வண்ணன் *சாளக்கிராமமடைநெஞ்சே.
ஏனோரஞ்ச வெஞ்சமத்துள் அரியாய்ப்பரியவிரணியனை,
ஊனாரகலம் பிளவெடுத்த ஒருவன்தானேயிருசுடராய்,
வானாய்த் தீயாய்மாருதமாய் மலையாயலை நீருலகனைத்தும்
தானாய் தானுமானாந்தன் *சாளக்கிராமமடைநெஞ்சே.
வெந்தாரென்பும்
சுடுநீறும் மெய்யில்பூசிக்
கையகத்து ஓர்
சந்தார் தலைகொண்டு லகேழும்
திரியும் பெரியோந்தான்
சென்று,
என் எந்தாய்!
சாபம்தீரென்ன இலங்கமுதநீர்த்
திருமார்பில் தந்தான்,
சந்தார்ப்பொழில்சூழ்ந்த *சாளக்கிராமமடைநெஞ்சே.
தொண்டாமினமுமிமையோரும் துணைநுல்
மார்பினந்தணரும்,
அண்டாவெமக்கேயருளாயென்று அணயும்
கோயிலருகெல்லாம்,
வண்டார்ப்பொழிலின்
பழனத்து வயலினயலேகயல்பாய,
தண்டாமரைகள்
முகமலர்த்தும் *சாளக்கிராமமடைநெஞ்சே.
தாராவாரும் வயல்சூழ்ந்த சாளக்கிராமத்தடிகளை,
காரார்ப்புறவின் மங்கை
வேந்தன் கலியனொலிசெய் தமிழ்மாலை,
ஆராருலகத்தறிவுடையார் அமரர்
நன்னாட்டரசாள,
பேராயிரமுமோதுமிங்கள் அன்றியிவையே
பிதற்றுமினே.
ஸ்ரீ ஆழ்வார் எம்பெருமானார் தேசிகன் திருவடிகளே சரணம்
கே.வி. வேணுகோபால்