Paramparaa – The Tradition Continues….

கப்பூர் ஸ்ரீ லஷ்மிநாராயண பெருமாள் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகத்திற்க்கு பக்தர்கள் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.              

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கப்பூர் ஸ்ரீ லஷ்மிநாராயண பெருமாள் திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேகம் வரும் திங்கட்கிழமை, 12.9.2022 அன்று சிறப்பாக நடைபெற உள்ளது.  ஸ்ரீயபதியான ஸ்ரீமந்நாராயணன் லோக  சேஷேமத்திற்காக அடியார்களை ரசஷிக்கத் திருவுள்ளம் கொண்டு பல தேசங்களில் அர்சாரூபமாய்  ஸேவை சாதித்து வரும் 108 திவ்ய தேசங்களில் நடுநாடு என்று அழைக்கப்பட்டதும் முதலாழ்வார்கள் மற்றும் திருமங்கை ஆழ்வாரால் பாடப்பெற்றதும்  ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகனுக்கு மிகவும் உகந்த திருவஹீந்தபுரம் ஸ்ரீ தேவநாதனுக்கும் திருக்கோவிலூர் ஸ்ரீ திரிவிக்ரமன்,  தேஹளீசன் மத்தியில் தென்பெண்ணையாற்றின் வடகரையில் அமைந்திருக்கும் “கப்பூர்” கிராமத்தில் பல வருடங்களுக்கு முன்பு (சுமார் 800) ஏற்பட்டது இத்திருக்கோயில். பின்பு, சுமார் 115 வருடங்கள் முன்பு அப்போதைய அழகியசிங்கரின் நியமனத்தின் பேரில்   ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா சம்ப்ரோசஷணம் நடந்தது. வருடத்தில் ஏழு வீதி புறப்பாடு உத்சவம் நடைந்தேறி வந்தன. ஸ்ரீ அஹோபில மடத்து  42, 43, 45 வது பட்டத்தில் இருந்த ஜீயர் ஸ்வாமிகள் எழுந்தருளி பெருமாளை மங்களாஸாஸனம் செய்திருக்கிறார்கள்.

சமீபத்தில் மறைந்த கப்பூர் ஸ்ரீ கோவிந்தராஜன் அவர்களின் பெரு முயற்சியால் மீண்டும் அவ்யய வருஷம், ஆனி மாதம் 14-ம் தேதி, அதாவது 28.6.2006 அன்று மஹா சம்ப்ரோசஷணம் நடைபெற்றது. மேற்படி சம்ப்ரோசஷணம் நடந்து பன்னிரண்டு(12) வருடங்கள் ஆனபடியால் புனர்சம்ப்ரோசஷணம் பண்ண உத்தேசித்து ஸ்ரீமத் அஹோபில மடம் 46-ஆம் பட்டம் அழகியசிங்கர் ஸ்ரீவண் சடகோப ஸ்ரீ ரங்கநாத யதீந்த்ர மஹாதேசிகனின் திவ்ய அனுக்ரஹத்துடன் வரும் சுபகிருது வருஷம் ஆவணி மாதம் 27-ம் தேதி, அதாவது 12.9.2022, அன்று உத்திரட்டாதி நசஷத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 06:30 முதல் 07:30 வரை கன்யா லக்னத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது. மாலை ஐந்து(5) மணி முதல் திருக்கல்யாண உற்சவம், பெருமாள் திருவீதி உலா(புறப்பாடு) விமரிசையாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தவிர, ஆண்டாள் விக்ரமும், பிரதிஷ்டை பண்ணி சம்ப்ரோசஷணம் செய்யப்பட உள்ளது. மேலும் ஸ்ரீ லஷ்மிந்ருஸிம்ஹனுக்கு ஒரு தனி சந்நிதி கட்டப்பட்டு 29-06-2012-ல் ஸ்ம்ப்ரோஷணம் நடைபெற்றது. நம் ஹரி என்னும் ஸ்ரீ லஷ்மிந்ருஸிம்ஹன் தன் அழகிய கண்களுடன் நம்மை தன் வசப்படுத்தி நற்கதி  அடையச்செய்கிறான் எனக்கூறினால் மிகையாகாது.

இக்கோயிலின் மூலவர் ஸ்ரீ லஷ்மி நாராயண பெருமாள் உட்கார்ந்த நிலையில் ஸ்ரீ மஹாலஷ்மியுடன் இருகிக்கிறார். உற்சவர் – ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் மிக காருண்யத்துடன் காட்சியளிக்கிறார். இவர்களுடன் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரும், ஸ்ரீ வேதாந்த தேசிகரும், ஸ்ரீ ஆதவன் சடகோபனும் காட்சியளிக்கிறார்கள். அருகில் ஸ்ரீ ஆஞ்சநேயர் சந்நிதியும் இருக்கிறது. எனவே, இந்த விசேஷ வைபவத்தில் பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு பெருமாள், தாயார்  திருவருள் பெற்று இன்புறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.  ஐஸ்வர்யம் தனம் தரும் பெருமாள் ஸ்ரீ லஷ்மி நாராயணன். தவிர அதை வரமாக வாரி அளிப்பவர்.

வரப் போகும்  மஹா கும்பாபிஷேகத்திற்க்கும், தவிர இந்த கோயில் நற்பணிக்கும் பெருமளவில் நிதி தேவைப்படுகிறது. பக்தர்கள் தங்களால் இயன்ற அளவு, பணமாவோ அல்லது பொருளாகவோ கீழ்கண்ட வங்கி எண்ணில் அனுப்புமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறது. நீங்கள் உங்கள் சக்திக்கு ஏற்ப ஏதாவது வேலையை   முழுமையாக செய்து தரலாம். தவிர, இந்த கோயிலை  பற்றி மேலும் விவரம் அறிய விரும்புவோர்கள் மதிப்புக்குரிய திரு கே.எஸ். கோபாலன் அவர்களை அவருடைய மொபைல் எண்: 9600163805-ல் என்நேரமும் தொடர்பு கொள்ளலாம். ஆக வாருங்கள் இக்கோயில் திருப்பணியில் ஈடுபட.

  Kapur Sri Lakshmi Narayana Perumal Temple Kaingarya Trust,

  Account number: 60152010047765,   Canara Bank,

  Mylapore Branch,  IFSC Code: CNRB 0016015

– கே.வி. வேணுகோபால்                                   

Learn Stotras, Divya Prabandham, Sanskrit and Nithya Karma

EVENTS

Local   Temple   NRI   Pontiffs’ Tour