Paramparaa – The Tradition Continues….

மஹாலட்சுமியை போற்றும் வீட்டில் ஐஸ்வரியம் கொட்டும்                       

லட்சுமி தாயாரை வீட்டிற்குள் அழைத்து நம் வீட்டில் நிரந்தரமாக தங்க வைப்பது என்பது சுலபமான காரியம் இல்லை. ஒரு வீட்டில் லட்சுமி கடாட்சத்தை நிலைக்க வைப்பதற்கு நாம் பெரிய அளவில் கஷ்டப்பட வேண்டும். எந்த வீட்டில் பெண் குழந்தைகளை போற்றிப் புகழ்ந்து ஆரவாரத்துடன் தலையில் தூக்கிக்கொண்டு வைத்துக் கொண்டாடுகிறார்களோ, அந்த வீட்டில் மகாலட்சுமி தாயார் கூப்பிடாமலேயே, வீட்டிற்குள் நுழைந்து விடுவாள். பெண் குழந்தைகளுக்கு இந்த பொருளை தானமாகக் கொடுத்தால் உங்கள் வீட்டில் மகாலட்சுமி நீங்கள் கூப்பிடாமலேயே உள்ளே வருவாள். வெள்ளிக்கிழமை ஒரு பெண் குழந்தைக்கு உங்களால் முடிந்த  கண்ணாடி வளையல்,புதிய ஆடை, அழகான வாசனை நிறைந்த பூக்கள் இந்த எல்லாப் பொருட்களையும் வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை நினைத்து தானம் செய்யுங்கள். நீங்கள் வாங்கிக் கொடுத்த கண்ணாடி வளையல் சத்தம் அந்த குழந்தையின் கைகளில் ஒலிக்கும்போது, அந்த குழந்தையுடைய மனது சந்தோஷப்படும்போது, உங்கள் வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்ய வந்துவிடுவாள். நீங்கள் வாங்கிக் கொடுத்த புத்தாடையை அந்த குழந்தை போட்டு மனமகிழ்ச்சியை அடையும்போது உங்கள் குடும்பத்திற்கு மகாலட்சுமியின் ஆசீர்வாதம் கிடைத்துவிடும்.

அந்த சிறிய குழந்தையின் தலையில் வாசனை நிறைந்த பூவை வைத்து அழகு பார்க்கும்போது, உங்களுடைய வீட்டில் மங்களகரமான காரியங்கள் அழகாக நடக்கத் தொடங்கிவிடும்.

மாதத்திற்கு ஒரு முறையோ, வருடத்திற்கு ஒரு முறையோ ஒரு ஏழை குழந்தைக்கு மேற்கூறிய பொருட்களை வாங்கிக் கொடுத்தாலே போதுமானது. கண்ணாடி வளையல் வாங்குவதற்கு நமக்கு பெரியதாக எந்த செலவும் ஆகப்போவதில்லை. இரண்டிலிருந்து மூன்று டசன் சிறிய குழந்தைகள் அணிவது போல கண்ணாடி வளையலை வாங்கி வைத்துக்கொண்டு, வெள்ளிக்கிழமைதோறும் கோவிலுக்கு சென்று அங்கு வரக்கூடிய சிறிய பெண் குழந்தைகளுக்கு இந்த கண்ணாடி வளையலை தானமாக கொடுத்தால் நன்மை தரும். அப்படி இல்லை என்றால் உங்கள் வீட்டின் அக்கம்-பக்கத்தில் இருக்கும் ஏழைப் பெண் குழந்தைகளுக்கு இந்த தானத்தை கொடுங்கள். திருமணமாகி குழந்தை பாக்கியம் தள்ளி போகும் தம்பதியர்கள் இந்த பரிகாரத்தை செய்தால் சீக்கிரமே குழந்தை பாக்கியம் கிடைக்கும். இந்த சிறிய தானத்தை செய்து, பெரிய அளவிலான பலனை அடையுங்கள். மும்பாயில், மஹாலட்சுமியை வணங்கிய பிறகு தான் வியாபாரிகள் பங்கு சந்தையை ஆரம்பிப்பார்கள். மஹாவிஷ்ணுவே, மஹாலட்சுமியை போற்றும் பக்தர்களுக்கே காட்சி அளிப்பார் எனக் கூறப்படுகிறது. லட்சுமியை வணங்கும் மக்களுக்கு எந்த மாநிலத்திலும் ஐஸ்வரியம் கொட்டும் எனக் கூறினால் மிகையாகாது. பக்தர்களாகிய நாமும் ஏன் அவர்களை பின்பற்றக்கூடாது.

மஹாலக்ஷ்மியின் மகிமையை கீழ்கண்ட ஸ்தோத்திரங்களிலும், மற்றும் அதன் விளக்கங்களிலும் பார்ப்போமா:-

ஸ்ரீ ஸ்துதி

ஆர்த்த த்ராண வ்ரதபிரம்ருதாஸார நீலாம்புவாஹை

அம்போஜாநா முஷஸி மிஷதாம் அந்தரங்கை ரபாங்கை:

யஸ்யாம் யஸ்யாம் திசி விஹரதே தேவி த்ருஷ்டிஸ் த்வதீயா

தஸ்யாம் தஸ்யாமஹமஹமிகாம் தந்வதே ஸம்பதோகா:

மஹாலக்ஷ்மியே, துன்பமடைந்தவர்களை காப்பதயே விரதமாய்க் கொண்டவளே அமுதத்தை போல் பொழிகின்ற கருமேகம் நீயே. காலையில் மலர்கின்ற தாமரையை ஒத்த கண்களை உடைய உன்னுடைய கடைக்கண் அருள் எந்த எந்த திசையில் எல்லாம் விழுகிறதோ அந்தந்த இடத்தில் செல்வங்களாகிறது  நான் போகிறேன், நான் போகிறேன் என்று போட்டியிடுகிறது. இதனால்  எல்லையற்ற செல்வங்களை தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் என அனைவருக்கும் அருள்வது பிராட்டியின் சிறிய கடைக்கண் பார்வை.

பிராட்டியை சரணமடைந்தவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம். இவ்வுலகில் பிராட்டியிடம் இவ்வுலகத்தில் கிடைக்கப்படும் செல்வங்களும், வயதையும், நல்ல ஆயுளையும், எவன் பிராட்டியிடம் சரணம் அடைகிறானோ, அதாவது ஆசார்யர்கள் மூலம் சரணமடைகிறேனோ,  அவர்கள் பிராட்டியின் சிபாரிசை கேட்ட எம்பெருமானால், இருவராலும் சேர்ந்து ஏற்கப்பட்டு, பெரிய துக்கமில்லா ஆனந்த பதமாகிற ஸ்ரீவைகுண்டம் கிட்டுகிறது.

முன் கூறிய இரண்டு ஸ்லோகங்களால் பிராட்டியின் பிரஸாதத்தை அவமதித்த இந்திரன், தேவர்கள், ஐராவதம் என்ற யானையும்  மறுபடியும் அனைத்து செல்வத்தையும் பெற்றனர்.

ஸ்ரீராமாயணத்தில் காகாசுரன்(இந்திரனின் மைந்தன்)  ஸீதையிடன் அவளின் திருமார்பை தீண்டி மிகப் பெரிய பாபம் செய்யப்பட்டது. ஆனால் அக்காக்கை மறுபடியும் பிராட்டியிடமும், மிகுந்த கோபங்கொண்ட எம்பெருமானையும் சரணமடைந்தது, எந்த தேவர்களாலும் அவனுக்கு அடைக்கலம் கொடுக்க முடியவில்லை என்ற காரணத்தால். இப்படி பெரிய அபராதம் செய்தவனையும் பிராட்டி மன்னித்து எம்பெருமானை ஏற்க வைப்பாள். அம்மாவானவள்  நாம் தவறு செய்தாலும் தான் அவற்றை மன்னித்து, தந்தையையும் மன்னிக்க செய்து நமக்கு வேண்டுவதை பெற்றுதருவது போல் பிராட்டியும் நமக்கு இவ்வுலக செல்வங்களையும், மோக்ஷத்தையும், ஸ்ரீவைகுண்டத்தில் செய்யும் கைங்கர்யத்தை, தருகிறார் என்பது தான்  நிதர்சனாமான் உண்மை.

பிராட்டியை சரணமடைந்தவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம். இவ்வுலகில் பிராட்டியிடம் இவ்வுலகத்தில் கிடைக்கப்படும் செல்வங்களும், வயதையும், நல்ல ஆயுளையும், எவன் பிராட்டியிடம் சரணம் அடைகிறானோ, அதாவது ஆசார்யர்கள் மூலம் சரணமடைகிறேனோ,  அவர்கள் பிராட்டியின் சிபாரிசை கேட்ட எம்பெருமானால், இருவராலும் சேர்ந்து ஏற்கப்பட்டு, பெரிய துக்கமில்லா ஆனந்த பதமாகிற ஸ்ரீவைகுண்டம் கிட்டுகிறது.

                                          கே.வி. வேணுகோபால், சென்னை

                                        

Learn Stotras, Divya Prabandham, Sanskrit and Nithya Karma

EVENTS

Local   Temple   NRI   Pontiffs’ Tour