விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கப்பூர் ஸ்ரீ லஷ்மிநாராயண பெருமாள் திருக்கோயிலில் மஹா சம்ப்ரோசஷணம் 12.9.2022 அன்று சிறப்பாக நடைபெற்றது. பக்தி தொலைகாட்சியில் இந்த விழாவை கண்டு மகிழலாம்.(லிங்க் இணைக்கப்ப்பட்டிருக்கிறது) செப்டம்பர் 13-ஆம் தேதி முதல், 48 நாட்கள் தொடர்ந்து மந்டலாபிஷேகம் நடைபெறும். அதற்கு பக்தர்கள் ஒரு நாள் அல்லது சில நாட்கள் தொடர்ந்து ஸ்பான்சர் செய்யலாம். மக்களின் நிதிநிலைமையை கருதி, ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஆகவே பணமோ, அல்லது காணிக்கையோ, கீழ்கண்ட முகவரியில் அளிக்கலாம்.
Shri K.S. Gopalan, Sri Lakshmi Narasimha Nivas, 55, First Main Road, Nanganallur, Chennai – 600 061- Phone/Mobile: 9600163805
தவிர, பக்தர்கள் கீழ்கண்ட வங்கி கணக்கில் பணமாகவோ அல்லது
காசோலையாகவோ செலுத்தலாம்.
Kapur Sri Lakshmi Narayana Perumal Temple Kaingarya Trust,
Account number: 60152010047765,
Canara Bank,
Mylapore Branch,
IFSC Code: CNRB 0016015
கப்பூர் கிராமத்தில் பல வருடங்களுக்கு முன்பு (சுமார் 800) ஏற்பட்டது இத்திருக்கோயில். பின்பு, சுமார் 115 வருடங்கள் முன்பு அப்போதைய அழகியசிங்கரின் நியமனத்தின் பேரில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா சம்ப்ரோசஷணம் நடந்தது. வருடத்தில் ஏழு வீதி புறப்பாடு உத்சவம் நடைந்தேறி வந்தன. ஸ்ரீ அஹோபில மடத்து 42, 43, 45 வது பட்டத்தில் இருந்த ஜீயர் ஸ்வாமிகள் எழுந்தருளி பெருமாளை மங்களாஸாஸனம் செய்திருக்கிறார்கள்.
மறைந்த திரு கோவிந்தராஜன் மற்றும் அவரது திருமதி, ஹேமா கோவிந்தராஜன் அவர்களின் கடும் முயற்சியால் இந்த கோவில் புத்துணர்ச்சி பெற்று விமரிசையாக கட்டி முடிக்கப்பட்டது. கோயிலின் மூலவர் ஸ்ரீ லஷ்மி நாராயண பெருமாள் உட்கார்ந்த நிலையில் ஸ்ரீ மஹாலஷ்மியுடன் இருக்கிறார். உற்சவர் – ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் மிக காருண்யத்துடன் காட்சியளிக்கிறார். இவர்களுடன் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரும், ஸ்ரீ வேதாந்த தேசிகரும், ஸ்ரீ ஆதவன் சடகோபனும் காட்சியளிக்கிறார்கள். அருகில் ஸ்ரீ ஆஞ்சநேயர் சந்நிதியும் இருக்கிறது. எனவே, இந்த விசேஷ வைபவத்தில் பக்த கோடிகள் அனைவரும் கலந்து கொண்டு பெருமாள், தாயார் திருவருள் பெற்று இன்புறுமாறு அன்புடன் அழைக்கின்றோம். ஐஸ்வர்யம் தனம் தரும் பெருமாள் ஸ்ரீ லஷ்மி நாராயணன்.
….முற்றும்….
கே.வி. வேணுகோபால் சென்னை