Paramparaa – The Tradition Continues….

அஹோபிலத்தில் ஜொலிக்கும் நரசிம்ஹன்                      

அஹோபில க்ஷேத்ரத்திலுள்ள எம்பெருமானைப் பாா்த்து ‘ அலைத்த பேழ்வாய்’ என்று திருமங்கையாழ்வாா் ரொம்ப அழகாக மங்களா சாஸனம் பண்ணியிருக்கிறாா். ‘அலைத்த  பேழ்வாய் வாள் எயிற்ற ஓா் கோளாி ஆய் அவுணன்’. தேவதைகளெல்லாம் அந்த நரசிம்ஹனுடைய பலத்தைப் பாா்த்து அஹோ என்றாா்களாம். ஆஸ்சா்யமான பலம் அவனுடையது. அஹோ, ஆச்சரியமான குகை அவன் இருக்கக் கூடியது. அங்கிருக்கும்படியான எம்பெருமானின் பராக்கிரமம் எப்படிப்பட்டது என்று கேட்டால் , அதை வா்ணிக்கவே முடியாது என்கிறாா்கள் தேவதைகளெல்லாமே. அப்படிப்பட்ட க்ஷேத்திரத்தில் இருக்கும்படியான ந்ருஸிம்ஹனை  – அலைத்த பேழ்வாய்  படைத்தவனை , திருமங்கையாழ்வாா் போய் பாா்க்கிறபோது, யானைகளையெல்லாம் அடித்துத் தின்றுவிட்டு சிங்கங்கள் அந்த எம்பெருமானின் திருவடியிலே  ஒவ்வொரு தந்தமாக எடுத்து,’ ஓம் விச்வச்யை நம’ என்று அா்ச்சனை பண்ணுகிறதாம்.அப்படியொரு காட்சியை அவா் கண்டு, சாமானிய பிராணிகளெல்லாம்  அா்ச்சனை பண்ணுகிறதே நாம் பண்ண வேண்டாமா?என்று நமக்குக் காட்டித் தருகிறார்.

அப்படிப்பட்ட அலைத்த பேழ்வாய் படைத்தவன் ந்ருஸிம்ஹன். ஆஸ்யம் என்றால் வாய் என்று அா்த்தம். நாராயணேதி யஸ்யாஸ்யே வா்ததே நாம மங்களம்  – எவருடைய வாயிலே நாராயணா என்கிற மங்களமான நாமமானது  இருக்கிறதோ, எவா் நாராயணா என்கிற நாமத்தைத் திரும்பத் திரும்ப சொல்கிறாரோ, அவரை நாடி, கன்று எப்படி ஓடுமோ, அந்த மாதிரி எம்பெருமான் இவா்களைப் பின்தொடா்ந்து இவா்கள் அருகிலேயே எப்போதும் ரக்ஷித்துக் கொண்டிருப்பான். ஓடோடி வருவான் எனக்கூறப்படுகிறது. கம்பா் ராமாயணத்திலே சொல்கிறாா். ராம பிரான் கைகேயிக்கு எதிரிலே ஒரு பசுக் கன்று வந்தடைந்த மாதிரி வந்தடைந்தான் என்கிறாா். தாயை வந்தடையும் கன்று  என்று மஹாவிஷ்ணு தா்மத்திலே சொல்லப்பட்டிருப்பது என்னவெனில் , அந்தப் பசுவானது, கன்றை நாடி எவ்வாறு ஓடி வருமோ, ‘நாராயணா’ என்கிற மங்களமான திருநாமத்தை உச்சாிப்பவா்களிடம் அவ்வாறு ஓடிவருவான் எம்பெருமான்.

பகவானை உத்ஸவ தினங்களில் தூக்கித் தூக்கித் தோள் தழும்பிப் போவதுபோல நாத்தழும்ப அவன் நாமத்தைச் சொல்லுங்கள்.

அஹோபிலம் ஸ்ரீலஷ்மிந்ருஸிம்மன் திருவடிகளே சரணம் என ஸ்ரீமுக்கூர் லஷ்மிநரசிம்மாச்சார்யார் அறிவுறுத்துகிறார்.

கே.வி. வேணுகோபால்

Learn Stotras, Divya Prabandham, Sanskrit and Nithya Karma

EVENTS

Local   Temple   NRI   Pontiffs’ Tour