Paramparaa – The Tradition Continues….

மணம் கமிழும் நவராத்திரி மகிமை

நவராத்திரியின் ஒன்பது அருமையான நாட்களை நினைவு கூற்ந்தால், மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு கொலு தான் நினைவு வரும். அவர்கள் கொலுவை சிறப்பாக ஒவ்வொரு வருடமும் வைத்து மகிழ்வதை பார்த்தால் நமக்கு அது சுலபமாக தெரியும். ஆனால் அதற்கு அவர்கள் படும் பாடு சொல்லி மாளாது. ஒரு அலுவுலக வேலையை விட கடுமையானது. அதை நாமும் கீழ்கண்டவாறு பார்ப்போமா? :-

வழக்கம் போல இந்த வருடமும் கொலு நெருங்கி விட்டது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் ஆட்களை வேலைக்கு அழைத்தால், ஏதாவது சாக்கு போக்கு சொல்லி வராமல் நழுவி விடுபவர்கள் தான் அதிகம். பாவம் குடும்ப பெண்மணிகள் என்ன செய்வார்கள். தனக்கு தானே உதவி என்ற மனப்பான்மையுடன் தங்கள் வீட்டாரின் உதவியுடன் கொலு வைத்து அழகு பார்க்கிறார்கள்.   என்ன செய்வார்கள் எனப் பார்ப்போமா? ஷெல்ப்பாக அமைத்து, தலைகாணி, போர்வை போட்டு அதை சாத்தி,  துணிபை எல்லாம் அடைச்சு, வெச்ச ஸ்டாண்டை ஒழித்து வைத்து, கொலு ஸ்டாண்டா மாற்றுவார்கள். தவிர, மேலிருந்து பழைய அட்டை பெட்டிகளை இறக்கி காகிதங்களிலே சுத்தி வெச்ச பொம்மைகளை எடுத்து ஸ்டாண்டில் வேட்டியை விரிச்சு, அடுக்கி வைத்து, ஒரு கலக்கு கலக்கி விடுவார்கள்.

பெரிய அளவில் ஆராய்ச்சி செய்வதில்லை. ஏனென்றால் நேரம் வெகு குறைவாகவே கிடைக்கும் நம் பெண்மணிகளுக்கு, மற்ற வீட்டு வேலைகள் போக. ஆனாலும் நமது மகளிர் எதையுமே சிரமமாக கருதுவதில்லை. வழக்கமாக ஒரே மாதிரி கொலு தான் எல்லோர் வீட்டிலும் வைப்பார்கள். படிக்கட்டுகள் தான் மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என வேறுபடும்.  மணி பொம்மைகளை அங்கேயும் இங்கேயும் கிடைத்த இடத்தில்சொருகி வைப்பார்கள். அதிகார நந்தியை மத்தியில் உட்கார வைத்து கொலுவுக்கு அழகு சேர்ப்பார்கள். ப்ளாஸ்டிக் ஸ்டேண்டை பிரிச்சு தனி தனியா படிமாதிரி ஸெட் பண்ணி, மர சொப்பு சாமான், சோழி கிளிஞ்சல், குட்டி சமையல். மணி பொம்மைகள்,, சின்ன மிருகங்கள் என்று தாராளமா பரத்தி வைப்பார்கள். தவிர,  நவதானியம் ஊரவச்சு, மொளைகட்டி பாலிகை போடுவார்கள்.

நவராத்திரி அன்று, மூன்றாம், மற்றும்  நாலாம் நாள் ராணுவ வீரர்கள் போல் கொலு ஜொலிக்கும். ஆனால், சரஸ்வதி பூஜை சமயம் அடிபட்ட வீரர் மாதிரி சுருங்கிவிடும். ஆனால் அந்த பொன்னான நாளில் வயலின் கீ போர்டு, ப்ளூட், ஸ்ருதி பெட்டி, எல்லாம் காற்றாட வெளியில் கொண்டு வந்து பூஜையில் அமர்த்துவார்கள். அப்பறம் கொலுவைஎல்லாம் பழையபடி பேக் பண்ணற படலம் இருக்கு.அதுக்கும் ஆட்களை கூப்பிட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. கொலுவுக்கு வருகிறவர்கள், குழந்தைகளோட வந்தா வயத்திலே புளியை கரைக்கும். எந்த பொம்மையில் கை வைக்குமோ என்ற அச்சம் ஏற்படும்.

ஆனால் மழலை பட்டாளம் இல்லாமல் எந்த பண்டிகை தான் இனிக்கும்? தவிர பெரியவர்கள் பழங்கதைகளையேபெசிக்கொண்டிருந்தால் சிறுவர்கள் என்ன தான் செய்வார்கள் பாவம்! எந்த தாய் தான் தன் குழந்தைகளை விட்டு கொடுப்பாள். “சும்மா பார்த்துட்டு வெச்சுடுவான்” என்பார் ஒரு பெண்மணி. ஆனால் மர்ம படங்களில் வருவது போல், அவர்கள் உடைக்காமல் வைக்கிற வரை சில பெண்மணிகளுக்கு படபடப்பு அதிகமாகிக் கொண்டே போக்கும். சில குழந்தைகள், தங்களுக்கு பிடித்த பொம்மைகளை கொடுக்க வேண்டும் என ஒப்பாரி வைக்கும். கூட வந்தவர்களும் குழந்தைகளை எப்படி  கண்டிப்பது என கண்டும் காணாமல் இருப்பார்கள்.

இப்படி இழந்த பொம்மைகள் ஏராளமாக இருக்கும்.இத்தனைக்கும் குழந்தைகளுக்கு என்று கொடுக்க, பென்சில் பாக்ஸ், கலர் பெட்டி, சின்ன பொம்மை எல்லாம் தனி தனியா வாங்கி வைத்திருப்பார்கள். என்ன செய்வது ‘பொறுத்தார், பூமி ஆழ்வார்’ என்ற பழமொழியை நினைவில் கொள்வதை தவிர, வேறுவழியில்லை அவர்களுக்கு. எது எப்படி என்றாலும், நவராத்திரி பண்டிகையின் ஒன்பது நாட்களுமே கோலாகலமாக நடைபெரும். பெண்கள் ஒருவரை ஒருவர் வீட்டுக்கு அழைத்து, குங்குமம், வெற்றிலை பாக்கு, சுண்டல், மற்றும் பல இத்யாதிகள் கொடுத்து உபசரிப்பார்கள். ஆண்களும் அவர்களுடன் சேர்ந்து கொள்வார்கள். பரஸ்பரம் பல விஷயங்களை பறிமாரிக் கொண்டு, அன்பளிப்புகளும் அளித்து, ஒன்றாக உண்பார்கள்.

நாம் நவராத்திரி கொண்டாடும் சமயத்தில், மேற்கு வங்கம், ஒடியா, திரிபுரா, பீஹார் மற்றும் அச்சாமில், துர்கா பூஜையை விமரிசையாக கொண்டாடுவார்கள். இதன் தாக்கம் மற்ற மாநிலங்களிலும் இருக்கும். பொதுவாக இந்த மகத்தான பண்டிகை, செப்டம்பர் இருதியில் அல்லது, அக்டோபர் முதல் அல்லது இரண்டாம் வாரம் நடத்தப்படும். காளி பூஜையை இவர்கள் தீபாவளி அன்று கொண்டாடுவார்கள்.  நவராத்திரியின் மகிமையை முன்னிட்டு, மறைந்த திரைப்பட இயக்குனர், ஏ.பி, நாகராஜன் அவர்கள்,’ நவராத்திரி’ என்ற பெயரில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மற்றும் நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களை வைத்து தயாரித்த  தமிழ் படம், 1964-ஆம் வெளியிடப்பட்டு மகத்தான வெற்றி பெற்றது.

தவிர, ஹிந்தியிலும் இந்த படம், ‘நயா தின் நயி ராத்’ என்ற பெயரில், அன்றைய பிரபல நடிகர்களான சஞ்சீவ் குமார், ஜயாபாதூரியை வைத்து வெளியிடப்பட்டு, வெற்றி வாகை சூடியது. நாமும் ஏன் மகளிருடன் சேர்ந்து வருடா வருடம் நவராத்திரி பண்டிகையை குதூகலமாக கொண்டாடக் கூடாது?  வாருங்கள் சாதித்து காட்டுவோம்!

                                                                                       கே.வி. வேணுகோபால், சென்னை.

Learn Stotras, Divya Prabandham, Sanskrit and Nithya Karma

EVENTS

Local   Temple   NRI   Pontiffs’ Tour