Paramparaa – The Tradition Continues….

பெருமை மிக்க  ராம நாமத்தின் மகிமை 

எப்போதும் மந்திரத்தையோ நாமத்தையோ உச்சரித்துக் கொண்டிருப்பது அஜபா எனப்படும். எந்நேரமும் விழித்திருக்கும்போதும் தூங்கும்போதும் எந்நேரமும் எப்போதும் உச்சரித்துக் கொண்டிருப்பது.இருதயத்தில் இறைவனை உணரும்வரை உச்சரித்துக் கொண்டிருப்பது. இந்த அஜபா ஜபம் உடல் மனம் ஆத்மா  உங்கள் உடல் செல்கள் அனைத்திலும் ஊடுருவி பாயும். இறைவனுக்கும நமக்கும் இடைவிடாத தொடர்பு கிடைக்கும். இதற்கு உதாரணமாக  ராம் அனுமனை சொல்லலாம். சீதாதேவிக்கு  எப்போதும் அனுமன் மீது சிறிது பொறாமை.

ஏனெனில் ராமனும் சீதாவும் ஒன்றாக இருக்கும் போது அனுமன் வந்துவிட்டால் கூட ராமன் அனுமனையே கண்களால் பார்த்துக் கொண்டிருப்பார். இதை ஒருநாள் ராமன் கண்டுபிடித்து விட்டார். அனுமனின் உடலிலிருந்து ரோமத்தை பிய்த்து சீதாவின் காதருகில் கொண்டு சென்றார். அந்த ரோமத்திலிருந்து ராம்ராம் என்ற ஓசை கேட்டுக் கொண்டேயிருந்தது. ராமர் சொன்னார் இப்போது புரிகிறதா சீதா நான் அவனைப் பார்க்கவில்லை. அவன் உறுதியான ஜபம் அவனுள் பரவி அது என்னை தானாக அவன் பக்கம் இழுக்கிறதுஎன்று…

உலகிலேயே உயர்ந்த நாமம் ஸ்ரீ ராமநாமம் எனக் கூறப்படுகிறது. ராமா என்று ஒருமுறை கூறினால் செய்த பாவங்கள் தீர்ந்து விடும். ஸ்ரீ ராமபிரான் இலங்கை செல்வதற்காக வானரங்கள் பாலம் அமைத்துக் கொண்டிருந்தனர். எல்லா வானரங்களும் கற்களைத் தூக்கி கடலுக்குள் போட்டன. ஒவ்வொரு கல்லும் மற்றொரு கல்லின் மீது சரியாக அமர்ந்தது ஆஞ்சநேயர் அந்தப் பணியை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார் மனதிற்குள் ராமநாமா ஜபித்தபடி ராமபிரானும் இதை கவனித்துக் கொண்டிருந்தார். அவர் மனதிலும்  ஆசை ஏற்பட்டது. நாமும் இந்த வானரங்களுடன் இணைந்து கல்லைத் தூக்கிப் போட்டால் என்ன எனக் கருதியபடியே ஒரு கல்லை எடுத்து கடலுக்குள் போட்டார்/ அந்தக்கல் சரியாக மற்ற கற்களின் மீது அமரவில்லை. அவை தண்ணீரில் அடித்துச் சென்று விட்டது.

ராமபிரானுக்கு வருத்தம் என்னவென்றால்ம் இந்த வானரங்கள் போடும் கற்கள் மட்டும் மற்றொரு கல்லின் மீது அமர்ந்து விட்டதே இதற்கு என்ன காரணமாக இருக்கும் என வருத்தப்பட்டார். ஆஞ்சநேயர் ராமர் அருகில் வந்தார். அவர் அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தார். ஆஞ்சநேயா நான் செய்ததை நீ பார்த்து விட்டாயா. எனக்கு ஒரு கல்லைபோடக்கூடத் தெரியவில்லை. என்னை நினைத்து எனக்கே வெட்கமாக இருக்கிறது என்றார்.அதற்கு ஆஞ்சநேயர் ப்ரபோ எல்லா வானரங்களும் உங்கள் தாரக மந்திரமான ராம் ராம் என்ற உங்கள் நாமத்தைச் சொல்லிக் கொண்டே கற்களைத் தூக்கிப் போட்டன. அவை சரியாக அமர்ந்தது. நீர் ராமனாகவே இருந்தாலும் ராம நாமம் சொல்லி போட்டிருந்தால் அது சரியாக கற்களில் போய் அமர்ந்திருக்கும் என்றாராம்.

ராமநாமம் அவ்வளவு சக்தி வாய்ந்தது மட்டுமில்லாமல்  மிகவும் அற்புதமானது. ஸ்ரீ ராமரின் பெயரை இடைவிடாது உச்சரிப்பதன் மூலம் எல்லா உயிர்களிடத்தும் ராமனை காணலாம். எல்லா வகையான துன்பங்களிலிருந்தும் விடுதலை பெறலாம். பாவங்களிலிருந்து கடைந்தேறலாம். இவ்வளவு சக்தி வாய்ந்த ராம நாமத்தை தெருவில் நடந்து போகும் போதும், ஆபீஸில் வேலை செய்யும் போதும், வீட்டில் சமையல் செய்யும் போதும் சொல்லலாம். வட நாட்டில் ராம் என்ற சொல்லை முன்பின் தெரியாதவர்கள் கூட  ‘ஜெய்ராம்ஜிகி ஜே” என்று கூறி தங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வார்கள். புனிதமான ஓம் என்னும் மந்திரத்திற்கு சமமானது ராம நாமம்.  நம் தமிழ்நாட்டிலதான் குட்மார்னிங் வணக்கம் என்று சொல்கிறோம் வடநாட்டு பக்கம் காலையில் வரும் பால்காரர் கூட ராம் ராம் என்று கூப்பிட்டுத்தான் பாலை ஊற்றுவார். அவ்வளவு மகத்தானது ராமநாமம். 

  கே.வி. வேணுகோபால்

                               சென்னை

Learn Stotras, Divya Prabandham, Sanskrit and Nithya Karma

EVENTS

Local   Temple   NRI   Pontiffs’ Tour