Paramparaa – The Tradition Continues….

ஸ்ரீ உவே. பனமுகை வீரவல்லி நரஸிம்ஹாசார்யார்ஸ்வாமி (ஸ்ரீகார்யம் ஸ்வாமி) – ஶதமான மஹோத்ஸவம்

வைகுண்டவாசி பனமுகை வீரவல்லி ஶ்ரீ உ வே நரஸிம்ஹாசார்யார் ஸ்வாமியின் ஶதமான மஹோத்ஸவம்,ப்ரக்ருதம் ஶ்ரீமத்

அழகியசிங்கரின் ஆத்யக்ஷத்தில், வைகாசி

ரேவதி அன்று ஶ்ரீமத் அஹோபில மடம், சேலையூரில்

ஜூன்10ஆம் தேதி வெகு

சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீமத் அழகியசிங்கர் திருமேனி அசக்தி அதிகமாக இருந்தாலும்

பரமகருணையுடன் முன்னதாகவே எழுந்தருளி இருந்து நடத்தி வைத்த பாங்குக்கு அனைவரும்

தலை வணங்கினர்.  திருவள்ளூர் ஶ்ரீவீரராகவன் ப்ரஸாதம் ஶ்ரீமத் அழகியசிங்கருக்கும் பனமுகை ஶ்ரீகார்யம் ஸ்வாமியின் படத்திற்கும் ஸமர்ப்பிக்கப்பட்டது

வேதவிண்ணப்பத்துடன், நாவல்பாக்கம் மஹாவித்வான் ஶ்ரீ உ வே வாஸுதேவாசார்யர் ஸ்வாமி

ஸ்வாகத புஷ்பம் ஸமர்ப்பிக்க, மஹோத்ஸவ

வைபவம் இனிதே தொடங்கியது.முதலில் ஶ்ரீமத்

அழகியசிங்கரின் அனுக்ரஹ-பாஷணம்; அதில்,நம் மடத்தின் ஶ்ரீகார்யம்

ஸ்வாமி, முக்கூர்

ஶ்ரீமத் அழகியசிங்கரின் முகபாவனையைக் கொண்டே

எவ்வண்ணம் திருவாராதன கைங்கர்யம் முதல் அனைத்து கைங்கர்யங்களையும் நேர்த்தியாக

கையாளுவார் என்பதையும், சதஸ்ஸிற்கு

ஏளியிருக்கும் அனைவருக்கும் பாரபக்ஷமின்றி எப்படி ஸம்பாவனை வழங்குவார் என்பதையும்

கூறி, ஶ்ரீகார்யம்

ஸ்வாமி எவ்வாறு தேவனார்விளாகம் ஶ்ரீமத் அழகியசிங்கர் மற்றும் முக்கூர் ஶ்ரீமத் அழகியசிங்கர்கள் திருவுள்ளம்

உகக்கும்படி ஏளியிருந்தார் என நினைவுகூர்ந்து அருளினார். பனமுகை ஸ்வாமி சிறந்த

அனுஷ்டாதா மட்டுமல்லாமல், அவ்வாசார

அனுஷ்டானத்தை அடுத்த தலைமுறையினருக்கும் சொல்லிவைத்து

ஸம்ப்ரதாய  வ்ருத்திக்கும் வித்திட்டார் என்பதையும் வியந்து சாதித்து, அந்த வித்தே இன்றுமெதுமெதுவே “GSPK(Global

Stotra Parayana Kainkaryam)” மற்றும்“SampradayaManjari

ePatashala” மூலம் ஸம்ப்ரதாய வித்வான்களின்

துணையோடு வளர்ந்து வருகிறது என்று மிகவும் சிலாகித்து அருளியாயிற்று; இது மேன்மேலும் அபிவிருத்தி அடைய

ஶ்ரீமத் அழகியசிங்கர் மனமுவந்து அனுக்ரஹித்தும் ஆயிற்று.

தொடர்ந்து இரண்டு புத்தகங்களின் வெளியீடு நடந்தது.

1. “திருவள்ளூர் மங்களாஶாஸன பத்ததி” –

ஶ்ரீமத் இஞ்சிமேட்டழகியசிங்கருக்கு க்ருதக்ஞதா பூர்வகமாய் திருவள்ளூர் கோவிலில் ஸ்ரீஸ்வாமி

தேஶிகன் மற்றும் ஸ்ரீமத் ஆதிவண்ஶடகோபஸ்வாமி சாற்றுமுறை தினங்களில் மங்களாஶாஸன

சமயத்தில் அனுஸந்தானம் செய்ய ஏற்றது

2. “ஶதமான மலர்” –

ஶ்ரீமத் அஹோபில மடம் ஶ்ரீமத் ஆதிவண் ஶடகோப யதீந்த்ர மஹாதேஶிகன்

முதல் ப்ரக்ருதம் ஶ்ரீமத் அழகியசிங்கர் வரை க்ருதக்ஞதா பூர்வகமாய்  ஶ்ரீமத் அழகியசிங்கர்களின் வைபவம்,

 பனமுகை ஸ்வாமியின்

திவ்யசரிதம் மற்றும் கட்டுரைகள், முக்கூர்

ஶ்ரீமத் அழகியசிங்கரின் அருளிச்செயல்கள் என அனைத்தையும்உள்ளடக்கிய மலர்.

இந்த இரண்டு ஶ்ரீகோசங்களை ப்ரக்ருதம் ஶ்ரீமத் அழகியசிங்கர்

திருக்கரத்தால் வெளியிட முதல் ப்ரதியை ஶ்ரீ கார்யம் ஶ்ரீ உ வே பத்மநாபாசார்யார்

ஸ்வாமியும் தொடர்ந்து ஸ்ரீமத் ஆராதகர் ஸ்வாமிகளும் பெற்றுக்கொண்டனர்.

அடுத்து காணொளி சிறப்பு தொகுப்பு – பனமுகை ஸ்வாமியின் வைபவ உபந்யாஸமாக

கடந்த பல மாதங்களாக ப்ரதி ரேவதியன்று ஸம்ப்ரதாய வித்வான்கள் பலரும் GSPKவில் பகிர்ந்து கொண்ட காணொளியின்

சிறப்பு தொகுப்பு ஒளிபரப்பப் பட்டது.

அடுத்து உத்ஸவத்தின் முக்கிய நிகழ்ச்சியாக “சிங்கப்பிரான்

பெருமை” என்ற தலைப்பில் ஸத்ஸம்ப்ரதாய மஹாவித்வான்கள் உபந்யஸித்தார்கள்.

பருத்திப்பட்டு வங்கீபுரம் தேவனார்விளாகம் ஶ்ரீ உ

வேபத்மநாபாசார்யார் (ஶ்ரீகார்யம்) ஸ்வாமியின் “புராணங்களில் ந்ருஸிம்ஹ” அனுபவம்

என்ற தலைப்பின் கீழ் உபக்ரம உபந்யாஸம் நடைபெற்றது. புராணத்திலிருக்கும் ந்ருஸிம்ம விஷய

ஸாரத்தை முக்கூர் ஶ்ரீமத் அழகியசிங்கர் பரம கருணையுடன் “ஶ்ரீ லக்ஷ்மீந்ரஸிம்ஹ

கராவலம்பம்” என்ற ஸ்தோத்ரத்தில் கொடுத்ததைக் காட்டி இரண்டிற்கும் ஒரே பலஶ்ருதி

என்று காட்டி அனுக்ரஹித்தார்.

தொடர்ந்து பழவேரி ஶ்ரீ உ வே லக்ஷ்மீநரஸிம்ஹாசார்யார்  (ஆராதகர்) ஸ்வாமி, ஆசார்ய

மங்களரூபமாய் வில்லிவலம் ஶ்ரீமத் அழகியசிங்கர், ஸ்ரீ முக்கூர் ஶ்ரீமத்அழகியசிங்கர் விஷயமாக

அருளிச்செய்த “ஆசார்யமங்கள” பத்ததியை பதபதார்த்த விசேஷங்களோடு ஆச்சர்யமான

குறிப்புகளோடு ஶ்ரீமத் அழகியசிங்கர் ஸாதித்திருக்கிறார் என்று எடுத்துக்காட்டி

உபந்யஸித்தார்.

வில்லூர் நடாதூர் ஶ்ரீபாஷ்ய ஸிம்ஹாஸனம்  ஶ்ரீ உவேகருணாகராச்சார்யார் ஸ்வாமி “வேதத்தில் ந்ருஸிம்ஹானுபவம்” என்ற தலைப்பின்கீழ் வேதத்தில் சாந்தோக்ய உபநிஷத் போன்றபல இடங்களில் ந்ருஸிம்ஹன் பற்றி குறிப்பிடப் பட்டிருந்தாலும்,யாகத்தில்

ஸாவித்ரக்ரஹ-மந்த்ரத்தில், “ஹிரண்யபாணி”

என்ற பதம்ஸாக்ஷாத் ஸ்ரீந்ருஸிம்ஹனையே அவனின் ரக்ஷணபெருமையை அனுபவிக்கிறது என

பட்டபாஸ்கரரின் பாஷ்யம் கொண்டு அத்யத்புதமாய் கவிதா நயத்துடன்ஸாதித்தருளினார்.

மறையில் ந்ருஸிம்ஹனை அனுபவித்த பின் ஆழ்வார்கள் அருளிய தமிழ்

மறையில் (திவ்ய ப்ரபந்தம்) ந்ருஸிம்ஹ அனுபவம் என்ற தலைப்பில் நம்மாழ்வாரின்

சிங்கப்பிரான் பெருமையோடு தொடங்கி உஷ:பாக்கம் ஶ்ரீ விஜயராகவாசார்யார் ஸ்வாமி

நரஸிம்ம அழகு, நரஸிம்மனை

நவின்று ஏத்துவார்களின் பாததுளியின் பெருமையைப் பேசி,பல்லாண்டு பாடி, நம்மாழ்வாரின் ந்ருஸிம்ஹ உபாஸன பாசுரத்தோடு

கோர்வையாய் ஸாதித்தருளினார்.

எத்தனையோ திவ்ய தேசங்களில் ந்ருஸிம்ம ரூபியாய் அருளினாலும்

ஶ்ரீமத் அஹோபில மட ஆராத்ய மூர்த்தி மாலோலனின் சொந்த திவ்ய தேசமான

“சிங்கவேள்குன்றம்” பற்றி கூத்தப்பாக்கம் ஶ்ரீ உ வே ரங்கநாதாசார்யார் ஸ்வாமி,  “சிங்க

வேள் குன்றம்” என்ற திருநாமத்தின் விளக்கத்தோடு, ‘அல்லிமாதர்

புல்க நின்ற’ என்று பெரியபிராட்டியின் விசேஷத்தை ஸாதித்து, ந்ருஸிம்ஹன் என்றாலே பய பக்திதான் என்று

விஸ்தாரமாக “அங்கண்ஞாலம் அஞ்ச அங்கு ஓர்” பாசுரம் மூலம் திருமங்கையாழ்வார்

அனுபவித்த முறையைக் காட்டி,திருமலையில்

அருளிச்செயல் கோஷ்டியில் ஏற்படும் அனுபவத்தையும் கூறி உபந்யஸித்தார்.

ஆழ்வார்களின் அனுபவத்தைத் தொடர்ந்து, ஸ்தவத்தில் ந்ருஸிம்ம அனுபவம் என்ற தலைப்பில்

வலையப்பேட்டை ஶ்ரீ உ வே ராமாசார்யார் ஸ்வாமி, வில்லிவலம் ஶ்ரீமத் அழகியசிங்கர் ஶ்ரீ வரதராஜ

ஸ்தவத்தில் உள்ள ஶ்ரீராமன் மற்றும் க்ருஷ்ணன் பற்றிய ஶ்லோகங்களை எடுத்து எங்ஙனம் ந்ருஸிம்மனுக்குப்

பொருந்தி இருக்கிறது என்பதை ஸாதித்து, ஶ்ரீரங்கராஜ ஸ்தவத்தில் உத்தர ஶதகத்தில் பட்டர் மங்களாஸாசனம்

செய்த ஶ்லோகம் அழகியசிங்கர் என்ற திருநாமத்திற்கும், சஞ்சாரத்திற்கும் பொருந்தி இருக்கிறது என

அத்யத்புதமாய் சாதித்தருளினார்.

ஸ்ரீ ஸ்வாமி தேஶிகன் ஶ்ரீஸூக்திகளில் பல இடங்களில் ந்ருஸிம்ஹ

அனுபவமிருந்தாலும், அவதாரங்களில்

ஒப்பற்ற அவதாரம் ந்ருஸிம்ம அவதாரம் என்றும், எம்பெருமானுக்குப் பல பக்தர்கள் இருந்தாலும்

ஒப்பற்ற பக்தன் ப்ரஹ்லாதன் என்றும் இரு விஷயத்தை ‘பக்தஸ்ய தானவசிசோ:’ என்னும்

ஶ்லோகம் கொண்டு  நாவல்பாக்கம் ஶ்ரீ உ வே வாஸுதேவாசார்யார் ஸ்வாமி தமக்கே உண்டான பாணியில் சொல்லி,இரண்யகசிபுவின் தூணைத்தவிர

மற்ற அனைத்து தூண்களில் ந்ருஸிம்ஹன் ந்ருஸிம்ஹனாகவே இருக்கிறான் என்று

ஸாதித்தருளினார்.

முத்தாய்ப்பாக ஶ்ரீ உவே காணியம்பாக்கம் மதுஸுதனாசார்யார் ஸ்வாமி,வேதாந்த விஷயம் என்றால் என்ன

என்று சுலபமாக விளக்கி பின் ஸூத்ரகாரர் எவ்வாறு பரமாத்மா விஷயத்தை நிரூபணம்

பண்ணியிருக்கிறார் என்றுகூறி அருளினார்.

இந்த வித்வான்களுடன் கூடவே ஸ்ரீ ஆராதகர் திருவயிந்தை

வீரராகவாசார்யர் ஸ்வாமியும் இடையிடையே ஸ்ரீமத் ஸ்ரீகார்யம் பனமுகை ஸ்வாமி பற்றிய

அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். அவர் ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீமத் பௌண்டரிகபுரம்

ஆச்ரமத்தில் நடந்து வந்த ஸ்ரீபாஷ்ய ஸதஸ்ஸில் ஒவ்வொரு வாரமும் தவறாமல் ஊக்கத்துடன்

கலந்துகொண்ட வைபவம், விஷயம்

சொல்பவர்களை ஊக்குவித்து போற்றிய ஸௌலப்யம், ஸ்ரீமத் வில்லிவலம் அழகியசிங்கர்

ஆஸ்தான-ஸ்வீகாரத்தில்  ‘ஸகேதி மத்வா’ ஶ்லோகம் சொல்லி ப்ரார்த்தித்த மஹாமனஸ், ஸ்ரீரங்கத்தில்

வசதிகள் குறைந்த க்ருஹத்தில் இருந்துகொண்டு நிறைந்த கைங்கர்யம் செய்த வைபவம்

முதலியவை சில. மேலும், இடையிடையே, பனமுகை ஸ்வாமி ம்ருத் கைங்கர்யம் தொடங்கி

ஶ்ரீஸந்நிதி ஶ்ரீகார்யமாக, கைங்கர்ய

ஶ்ரீமானாகவே தம் தேவிகளோடு ஏளியிருந்தார் என்றும் மத்யேமத்யே அவர் தௌஹித்ரர்

பகிர்ந்து கொண்டது ரசமான அனுபவம்.

ஸ்வாமியின் ஶதமான மலர் வெளிவர பேருதவி புரிந்த பழவேரி ஶ்ரீ உ வே லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாசார்யார்

(ரகு) ஸ்வாமி, பழவேரி

ஶ்ரீ உ வே லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாசார்யார் (பாலாஜி) ஸ்வாமி, மற்றும் ஶ்ரீ உ வே ஏ.பி.என் ஸ்வாமி

அவர்களுக்கும் மற்றும் “GSPK ஸேவாஶ்ரீ”க்களுக்கும்,ஏளியிருந்த வித்வான்கள்

அனைவருக்கும் பனமுகை ஶ்ரீகார்யம் ஸ்வாமியின் சந்ததியினர் தந்யவாதங்களுடன் வித்வத் ஸம்பாவனையும் ஸமர்ப்பிக்க,  ஶ்ரீமத்

அழகியசிங்கரின் பூர்ண அனுக்ரஹத்தோடு மங்களமாக நிறைவுற்றது ஶதமான மஹோத்ஸவம்.

Learn Stotras, Divya Prabandham, Sanskrit and Nithya Karma

EVENTS

Local   Temple   NRI   Pontiffs’ Tour