நம்நாட்டுத் திருப்பதிகளில் திருக்கோவிலூருக்கும் திருவஹிந்திபுரத்திற்க்கும் நடுவில் விழுப்புரத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள ‘கப்பூர்’ என்ற கிராமத்தில் அமைந்திருக்கும் ‘ஸ்ரீ லஷ்மி நாராயண திருக்கோயில்’ சுமார் 800 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டதாக சொல்கிறார்கள். தென்பெண்ணை ஆற்றங்கரையின் அருகில் உள்ள இக்கோயிலின் மூலவர் ஸ்ரீ லஷ்மி நாராயண பெருமாள் உட்கார்ந்த நிலையில் ஸ்ரீ மஹாலஷ்மியுடன் இருகிக்கிறார். உற்சவர் – ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் மிக காருண்யத்துடன் காட்சியளிக்கிறார். இவர்களுடன் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரும், ஸ்ரீ வேதாந்த தேசிகரும், ஸ்ரீ ஆதவன் சடகோபனும் காட்சியளக்கிறார்கள். அருகில் ஸ்ரீ ஆஞ்சநேயர் சந்நிதியும் இருக்கிறது.
800 வருஷம் புராதனமான இக்கோயிலுக்கு 28-6-2006 அன்று அஷ்டபந்தன ஜீர்ணோதாரன மஹாஸம்ப்ரோஷணம் நடைபெற்றது. பழுதுப்பட்டு போய் இருந்த இக்கோயில் மிக அழகான கோயிலாக இப்பொழுது காட்சி அளிக்கிறது. மேலும் ஸ்ரீ லஷ்மிந்ருஸிம்ஹனுக்கு ஒரு தனி சந்நிதி கட்டப்பட்டு 29-06-2012 ல் ஸ்ம்ப்ரோஷணமும் நடைபெற்றது. நம் ஹரி என்னும் ஸ்ரீ லஷ்மிந்ருஸிம்ஹன் தன் அழகிய கண்களுடன் நம்மை தன் வசப்படுத்தி நற்கதி அடையச்செய்கிறான்.
ஸ்ரீ அஹோபில மடத்து 42, 43, 45 வது பட்டத்தில் இருந்த ஜீயர் ஸ்வாமிகள் எழுந்தருளியிலிருந்து பெருமாளை மங்களாஸஸானம் செய்திருக்கிறார்கள். வருடத்தில் 10 உற்சவம் நடைபெறுகிறது. தவிர சீக்கிரமே ஆண்டாளுக்கு பிரதிஷ்டை பண்ணி சம்ப்ரோக்க்ஷணம் நடக்க உள்ளது.
நீங்கள் உங்கள் சக்திக்கு ஏற்ப ஏதாவது வேலையை முழுமையாக செய்து தரலாம். உங்களது அனைவரது ஒத்துழைப்புகளால் தான் இந்த தெய்வீக பணி நிறைவேறும். மேலும் தகவல் தேவைப்பட்டால் கீழ்கண்ட தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
மேநேஜிங் டிரஸ்டி
கே.எஸ். கோபாலன்
மொபைல் எண்: 9600163805
ஆகவே நீங்கள் உங்கள் நன்கொடையை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்.
கப்பூர் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் கைங்கரியம் டிரஸ்ட்,
அக்கவுண்ட் நம்பர்: 60152010047765,
ஐஎப்எஸ்ஸி கோட்: எஸ்.ஒய்.என்.பி: 0006015
ஸிண்டிகேட் பாங்க்,
மைலாப்பூர்,
சென்னை – 600 004
ஐஸ்வர்யம் – தனம் தரும் பெருமாள்
ஸ்ரீ லஷ்மி நாராயணன் அதை வரமாக வாரி அளிப்பவர். நம் ஸ்ரீதேவி பூதேவி ஸமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் இவ்விருவரும் கூடிய ஸ்தலம் தான் கப்பூர். ஆக வாருங்கள் இக்கோயில் திருப்பணியில் ஈடுபட.
இப்படிக்கு
ஸ்ரீ லஷ்மி நாராயண பெருமாள்
கைங்கரியம் கமிட்டி
கே.வி. வேணுகோபால்
சென்னை