பக்தர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. ஜனவரி 22, 2024 அன்று அயோத்தியில் ராமர் கோவில் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகிறது. தகவல்களை பின்வருமாறு பார்த்து அறியலாம்:-
1) திறப்பு விழாவுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு இந்தியா முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கோவில்களில் ராம்துனிக்கு ஏற்பாடு செய்யப்படும்.
2) இது ஒரு சர்வதேச நிகழ்வாக இருக்கும்.
3) பதவியேற்பு விழாவைக் காண 160 நாடுகளைச் சேர்ந்தவர்கள் வருகை தர இருக்கிறார்கள்.
4) உலகம் முழுவதிலுமிருந்து 6500 பத்திரிக்கை ஊடகவியலாளர்கள் இந்த நிகழ்வை ஒளிபரப்ப பதிவு செய்துள்ளனர்.
5) மக்களின் நலனை மனதில் கொண்டுஅயோத்தியை சுற்றுலா பயணிகளின் முக்கிய இடமாக மாற்ற முயற்சி நடக்கிறது.
6) முதல் ஆண்டில் ஐந்து கோடி மக்கள் ராமர் கோயிலுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
7) மூன்று ஸ்டார் முதல் ஐந்து ஸ்டார் வரை பல ஹோட்டல்கள் தயாராக உள்ளன. மேலும் பல ஹோட்டல்கள் திறக்கப்படும் விரைவில்.
8) அயோத்தி விமான நிலையம் இந்தியாவில் இருக்கும் பல இடங்களிலிருந்து நேரடி விமானங்களுக்கு தயாராகி வருகிறது.
9)அயோத்தி ரயில் நிலையம் அனைத்து புதிய வசதிகளுடன் தயாராக உள்ளது.
10) சரயு (சர்ஜு) நதியின் கரைகள் புத்துயிர் பெற்றன.
11) அயோத்தி மற்றும் சுற்றுப்புறம் முழுவதும் கோடிக்கணக்கான விளக்குகளால் பிரகாசிக்கப்படும்.
12) கோவிலை தரிசிக்க வரும் பக்தர்கள் இந்திய ஆடைகளை மட்டும் அணிந்து வரவேண்டும்.
மேற்கூறிய அரிய தகவல்களை மனதில் கொண்டு, பக்தர்கள் தவறாமல் நாள்தோறும் கோவிலுக்கு வந்து கடவுளின் தரிசனத்தை பெற வேண்டும்.
– கே.வி. வேணுகோபால்