vrushabha sankramanam

அக்ஷ்ய த்ருதியை அன்று நகைகள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது

சுமார் 25 வருடங்களுக்கு முன்னால் அக்ஷ்ய த்ருதியை என்று தங்கம், வைரம், நகை வாங்க படை எடுத்ததும் கிடையாது.தான தர்மம் என்று வாரி வழங்கியதும் கிடையாது.அது ஒரு சாதாரண நாளாகத்தான் கழிந்தது. ஆனால் என்று பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும், தங்களின் விளம்பர முன்னேற்றங்களுக்காக அக்ஷயத்ருதியையில் தங்கம் வாங்கினால் மேன் மேலும் அக்ஷயமாக பெருகும் என்று அறிவிக்க ஆரம்பித்தார்களோ,அது முதல் கடைகளில் கூட்டம் பெருக்கெடுக்க தொடங்கியது. தயிர்சாதம், தண்ணீர், நீர் மோர் ,விசிறி ,பானகம் தானம் செய்தால் நல்லது என்று […]
இணிய சோபகிருது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

U.Ve. Chakravarty Ranganathan Swami Tamil New Year Wishes by Paramparaa
அஹோபிலத்தில் ஜொலிக்கும் நரசிம்ஹன்

அஹோபில க்ஷேத்ரத்திலுள்ள எம்பெருமானைப் பாா்த்து ‘ அலைத்த பேழ்வாய்’ என்று திருமங்கையாழ்வாா் ரொம்ப அழகாக மங்களா சாஸனம் பண்ணியிருக்கிறாா். ‘அலைத்த பேழ்வாய் வாள் எயிற்ற ஓா் கோளாி ஆய் அவுணன்’. தேவதைகளெல்லாம் அந்த நரசிம்ஹனுடைய பலத்தைப் பாா்த்து அஹோ என்றாா்களாம். ஆஸ்சா்யமான பலம் அவனுடையது. அஹோ, ஆச்சரியமான குகை அவன் இருக்கக் கூடியது. அங்கிருக்கும்படியான எம்பெருமானின் பராக்கிரமம் எப்படிப்பட்டது என்று கேட்டால் , அதை வா்ணிக்கவே முடியாது என்கிறாா்கள் தேவதைகளெல்லாமே. அப்படிப்பட்ட க்ஷேத்திரத்தில் இருக்கும்படியான ந்ருஸிம்ஹனை – […]
அரைமணிநல்லவிஷயங்கள்ஆயிரம்ஆண்டுதவசக்தியைவிடவலிமையானது

ஒருமுறை விஸ்வாமித்திரரின் ஆஸ்ரமத்திற்கு வசிஷ்டர் வந்திருந்தார். இருவரும் பல விஷயங்களைப்பற்றி விரிவாக பேசினார்கள். வசிஷ்டர் விடை பெறும் போது, விஸ்வாமித்திரர் அவருக்கு மறக்க முடியாத அன்பளிப்பு ஒன்றை வழங்க விரும்பி, ஆயிரம் ஆண்டு தவத்தால் தனக்கு கிடைத்த சக்தியை கொடுத்தார். மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட வசிஷ்டரும் நன்றி சொல்லி புறப்பட்டார். இன்னொரு சமயத்தில் வசிஷ்டரின் ஆஸ்ரமத்திற்கு விஸ்வாமித்திரர் வர நேர்ந்தது. வசிஷ்டரும் அவரை அன்புடன் உபசரித்தார். புண்ணியம் தரும் ஆன்மிக விஷயங்களை மட்டுமே பேசினார். விடை பெறும் […]
துளசியின் மகிமையே மகிமை

துளசியின் மகிமையே மகிமை கே.வி. வேணுகோபால் காலம் காலமாக நம் இல்லங்களில் , ஆலயங்களில் வழங்கப்பட்ட தீர்த்தம் , அதில் உள்ள மருத்துவ குணங்கள் , அந்த தீர்த்தத்தை தயாரிக்கும் முறை பற்றி பல அறிஞர்கள் விரிவாக கூறியிருக்கின்றனர். தவிர, இந்தியாவில் ஆன்றோர்கள் புனிதஆலயங்களின் வழிபாடுகள் மூலம்சூட்சுமமாக உடல் நோயும் , உளநோயும்நீங்கி நலம்பெற வழி வகுத்துள்ளனர்.ஆலயங்களை வலம் வருதல், அங்கங்கள்பூமியில் பட விழுந்து வணங்குதல்,அங்கப்பிரதட்சணம் செய்தல், காவடி எடுத்தல், திருமண் இடுதல், திருநீறு […]
பிரசித்தி பெற்ற கூத்தியம்பேட்டை வரதராஜப் பெருமாள் கோவில்

கே.வி. வேணுகோபால் சென்னை சிறு கிராமங்கள் பலவற்றிலும் பிரமிக்கத்தக்க வகையில் வைணவ ஆலயங்கள் இருக்கிறது என்பதற்க்கு உதாரணமாக விளங்குகிறது சீர்காழி தாலுகாவில் கூத்தியம்பேட்டை என்ற அழகிய கிராமத்தில் அமைந்துள்ள வரதராஜப் பெருமாள் ஆலயம் எனக் கூறினால் மிகையாகாது. சோழர்கள் கால் கட்டடக்கலையில் இந்த கோயில் அமைந்திருப்பதால், சோழ அரசர்களுள் யாரேனும் ஒருவர் தான் இவ்வாலயத்தைக் கட்டியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. பழமையான இந்தப் பரந்தாமன் திருத்தலத்துக்கு பல வைணப் பெரியோர்கள் வந்து தரிசனம் […]
செல்வத்தை பெருக வைக்கும் குசேல சரித்திரம்

மார்கழி மாதம் முதல் புதன்கிழமையன்று குருவாயுரப்பனுக்கு அவல் படைத்து இந்த குசேல சரித்திரத்தை படித்தால் செல்வம் பெருகும் எனக் கூறப்படுகிறது. அதை பின்வருமாறு பார்ப்போம்: குசேல நாமா பவது ஸதீர்யதாம் கத ஸ ஸாந்திபநி மந்திரே த்விஜ த்வதேக ராகேண தநாதி நிஸ்பருஹோ திநாநி நிந்யே ப்ரஸமி க்ருஹாஸ்தமீ சாந்தீபனிமுனிவரின் ஆசிரமத்தில் நீங்கள் குரு குலவாசமிருந்தபோது குசேலர் என்ற அந்தணரும் மிகுந்த பண்போடு இல்லறத்தைக் காத்துக்கொண்டே, பொருளின் மீது ஆசையில்லாமல் உமது அருளின் மீது மட்டும் நாட்டமுடையவராக […]
அமுதினை அள்ளித் தரும் நரசிம்ஹன் போற்றும் அரிய சிற்பங்கள்

நெல்லூர் ரங்கநாய்குலப்பேட்டை பகுதியை சேர்ந்த கடாம்பி நரசிம்ஹன் புஸ்தக வியாபாரம் செய்து வருவதோடு சித்திர கலையும் வளர்த்து வருகிறார். இவருக்கு சின்ன வயதில் இருந்தே சித்திரம் வரைவதில் மிக்க ஆர்வம் கொண்ட இவர் தெய்வ பக்தியுடன் தெய்வ உருவாவதை வரைய ஆரம்பித்தார் நிறைய சித்திரங்கள் வரைந்த இவருக்கு இக்கலையை மேலும் சிறப்பிக்க எண்ணி நாம் சாதாரணமாக உபயோகிக்கும் அட்டையை பயன்படுத்தி தன் கலை திறமையை காண்பிக்க எண்ணி அதில் பல கலை வடிவத்தை கொண்டு வந்தார் உதாரணமாக […]
திருவிளையாடல், ஒரு சகாப்தம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 1966 வெளிவந்த திருவிளையாடல் படம் 200 நாட்களுக்கு மேல் ஒடி பெரும் சாதனை படைத்தது என்று கூறினால் மிகையாகாது. அன்றைய புகழ் பெற்ற இயக்குனரான திரு. நாகராஜன் அவர்கள் பரமசிவனின் 64 திருவிளயாடல்களில் நான்கை மட்டும் எடுத்துக்கொண்டு திறம்பட எடுத்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். முதல் திருவிளையாட்டில் நக்கீரனாக வந்து சிவாஜி தருமியாக வரும் நாகேஷை விஷப்பரிட்சை செய்யும் காட்சி அருமையிலும் அருமை. கதைபடி நாகேஷ் 1000 பொற்காசுக்காக ஆசைப்படுகிறார். குறிப்பாக ஒரு இடத்தில் சிவாஜி “ஆசைக்கு நீ, அறிவிக்கு நான்” என்று கூறும் இடத்தில் ரசிகர்களின் கைதட்டல் அடங்கவில்லை. நக்கீரர் தன் கவிதையில் பிழை இருக்கிறது என்று சொன்னவுடன் சிவாஜியின் முகம் மாறுகிறது. “என் கவிதையிலா தவறு கண்டு பிடித்தாய். என் கண்களை நன்றாகப்பார்” என்ற நடிகர் திலகத்தின் சிம்மக்குரலை உணர்ந்தவுடன் சிவபெருமானே தனக்கு காட்சி தந்ததை அறிந்து கரம் கூப்பி மன்னிப்பு கேட்கிறார் உண்மையான நக்கீரர். தவறு யார் செய்தாலும் சுட்டிக்காட்டுவதற்க்கு தயங்காத நக்கீரனை பார்த்து சிவாஜி “நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே” எனக்கூறி கொட்டகையை ஆர்ப்பரிக்க வைக்கிறார். “நான் சிவாஜியுடன் நடித்த திருவிளையாடல் 400 படங்களுக்கு சமம். ஒரு பய என்னை குறை சொல்ல முடியாது” என நாகேஷ் சிவாஜி 2001ல் மறைந்த பிறகு ஒரு விழாவில் கூறினார். திருவிளையாடலில் தன்னை மீறி மனைவியாக வரும் சாவித்திரி மாமனார் வீட்டு யாகத்துக்கு சென்றவுடன் சிவாஜி ருத்ரதாண்டவம் ஆடும்பொழுது பரமசிவனாகவே மாறிவிடுகிறார். பார்வதியால் அவருக்கு ஈடு கொடுத்து ஆட முடியவில்லை. தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டவுடன் நடிகர் திலகம், நடிகையர் திலகத்தை பார்க்கும் அந்த ஒரு பார்வையே “அவர் பாத்திரமாகவே மாறிவிடுவார், பார்ப்பவரையும் ஏமாற்றிவிடுவார்” என மறைந்த நடிகை தேவிகா கூறியது தான் நினைவுக்கு வருகிறது. மீனவனாக வந்து தனது மனைவியை மீட்டு செல்லும் காட்சியிலும் சரி, ஏமனாதனின் அகந்தயை அடைக்கி பாணபத்திரரை காப்பாற்றும் காட்சியிலும் சரி சிவாஜி நடிப்பின் உச்சத்திக்கே சென்றுவிடுகிறார். குறிப்பாக பாலைய்யாவிடம் தன்னை பாணபத்திரராக வரும் மகாலிங்கம் நீ பாட்டுக்கு லாயக்கீல்லை என்று கூறி அனுப்பிவிட்டார் என்றவுடன் பாலைய்யாவின் ஆணவம் அடங்குகிறது. சங்கீத வித்துவான் பாலமுரளிகிருஷ்ணாவின் “ஒரு நாள் போதுமா’ பாட்டுக்கு, மதுரகுரலொன் சௌந்தரராஜன் “பாட்டும் நானே, பாவமும் நானே” பாட்டை சிவாஜீக்கு தகுந்தமாதிரி பாடுகிறார். ஆனால் சிவாஜி அதற்கு வாய் அசைக்கும் விதமே தனி. ஆவர் உடல் முழுக்க ஆடுகிற்து. சப்த நாடியும் ஒடுங்குகிற்து. -கே. வேணுகோபால்