கைங்கரியத்தின் மகிமையை உணர்த்துகிறது ஜி.எஸ்.பி.கே
சமீபத்தில் 46-ஆம் பட்ட அகோபில மடத்து ஜீயர் அழகிய சிங்கர், ஜி.எஸ்.பி.கே நிறுவனர் பார்த்த என்ற பார்தசாரதியின் அன்புக் கட்டளையை ஏற்று, அவர்கள் சென்னை மடத்தில் உள்ள சேலையூரில் வேத பண்டிதர்களையும், மற்றும் அறிஞர்களையும் கொளரவித்து பரிசு வழங்கிய விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அந்த விழாவில் கலந்து கொண்டவர்களைஆசிர்வதித்து கொளரவித்தார். ஜி.எஸ்.பி.கே எப்படி தோன்றியது என்பதை பின்வருமாறு பாப்போமா:- அகில உலக ஸ்தோத்திர பாராயண கைங்கரியம் சிங்கப்பூர் நாட்டிலிருந்து அரிய சேவைகளை செய்து வருகிறது. […]
மஹாலக்ஷ்மியின் மகிமை பக்தர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்
மஹாலக்ஷ்மியின் மகிமையை கீழ்கண்ட ஸ்தோத்திரங்களிலும், மற்றும் அதன் விளக்கங்களிலும் பார்ப்போமா:- ஸ்ரீ ஸ்துதி ஆர்த்த த்ராண வ்ரதபிரம்ருதாஸார நீலாம்புவாஹை அம்போஜாநா முஷஸி மிஷதாம் அந்தரங்கை ரபாங்கை: யஸ்யாம் யஸ்யாம் திசி விஹரதே தேவி த்ருஷ்டிஸ் த்வதீயா தஸ்யாம் தஸ்யாமஹமஹமிகாம் தந்வதே ஸம்பதோகா: மஹாலக்ஷ்மியே, துன்பமடைந்தவர்களை காப்பதயே விரதமாய்க் கொண்டவளே அமுதத்தை போல் பொழிகின்ற கருமேகம் நீயே. காலையில் மலர்கின்ற தாமரையை ஒத்த கண்களை உடைய உன்னுடைய கடைக்கண் அருள் எந்த எந்த திசையில் எல்லாம் விழுகிறதோ அந்தந்த […]
அனுமன் புகட்டும் செந்தூரம், வெற்றிலை மாலை மகிமை
அனுமனுக்கு மட்டும் செந்தூரம் பூசுவது ஏன்? ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை ஏன் ? இதை அறிந்துகொண்டு ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது எனக் கூறப்படுகிறது. அனுமனை ஆராதித்து வழிபட்டு இந்த மந்திரங்களை கூறி வந்தால் அச்சம் விலகி எடுத்த காரியம் வெற்றிபெறும் எனவும் இதிகாசத்தில் விளக்கம் அளிக்கப்படுகிறது . ஸ்ரீ ராமஜெயம் மந்திரத்தை வாரந்தோறும் செவ்வாய்கிழமை மற்றும் சனிக்கிழமை அன்று அனுமனை ஆராதித்து வழிபட்டு இந்த மந்திரங்களை கூறி வந்தால் அச்சம் விலகி எடுத்த காரியம் […]
லட்சுமி பூஜை தீபாவளி திருநாளில் செய்வது சாலச் சிறந்தது
லட்சுமி பூஜை இல்லாமல் தீபாவளி இனிக்குமா? இந்த மகத்தான திருநாளில் நாம் செய்யும் பூஜையின் மூலம் சகல ஐஸ்வர்யங்களையும் பெற முடியும். அதில் மிக முக்கியமான பூஜை லட்சுமி குபேர பூஜை. செல்வ வளங்களை வழங்கிடும் மகாலட்சுமியையும், நவநிதிகளையும் வைத்துள்ள குபேரரையும் ஒரு சேர பூஜை செய்வதன் மூலம் நமது செல்வ நிலை உயரும். தரித்திரம் நீங்கும். இதற்கு மிகவும் உன்னதமான நாள் தீபாவளி திருநாள். தீபாவளி அன்று தான் மஹா விஷ்ணு லட்சுமியிடம் வந்து வைகுண்டத்தில் […]
நாடும் நாமும் நலமுற நாளும் நாலாயிரம்
நாடும் நாமும் நலமுற நாளும் நாலாயிரம் ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிய பெரிய திருமொழியை பின் வரும் வாக்கியங்களில் கண்டு ரசிப்போம். திருச்சாளக்கிராமம் கலையும்கரியும்பரிமாவும் திரியும்கானம்கடந்துபோய்,சிலையும்கணையும்துணையாகச் சென்றான்வென்றிச்செறுக்களத்து,மலைகொண்டலைநீரணைகட்டி மதிள்நீரிலங்கைவாளரக்கர் தலைவன்,தலைபத்தறுத்துகந்தான் *சாளக்கிராமமடைநெஞ்சே. கடம்சூழ்க்கரியும்பரிமாவும் ஒலிமாந்தேரும்காலாளும்,உடன்சூழ்ந்தெழுந்தகடியிலங்கை பொடியவடிவாய்ச்சரம்துரந்தான்,இடம்சூழ்ந்தெங்குமிருவிசும்பில் இமையோர்வணங்கமணம்கமழும்,தடம்சூழ்ந்தெங்குமழகாய *சாளக்கிராமமடைநெஞ்சே. உலவுதிரையும்குலவரையும் ஊழிமுதலாவெண்திக்கும்,நிலவும்சுடருமிருளுமாய் நின்றான்வென்றிவிறலாழிவலவன், வானோர்த்தம்பெருமான் மருவாவரக்கர்க்கெஞ்ஞான்றும்சலவன், சலம்சூழ்ந்தழகாய *சாளக்கிராமமடைநெஞ்சே. ஊராங்குடந்தையுத்தமன் ஒருகாலிருகால்சிலைவளைய,தேராவரக்கர்த்தேர்வெள்ளம்செற்றான் வற்றாவருபுனல்சூழ் பேரான்,பேராயிரமுடையான் பிறங்குசிறைவண்டறைகின்றதாரான், தாராவயல்சூழ்ந்த *சாளக்கிராமமடைநெஞ்சே. அடுத்தார்த்தெழுந்தாள்பிலவாய்விட்டலற அவள்மூக்கயில் வாளால்விடுத்தான், விளங்குசுடராழி விண்ணோர்ப்பெருமான் நண்ணார்முன்கடுத்தார்த்தெழுந்தபெருமழையைக் கல்லொன்றேந்தியினநிரைக்காத்தடுத்தான் தடம்சூழ்ந்தழகாய *சாளக்கிராமமடைநெஞ்சே. தாயாய்வந்தபேயுயிரும் தயிரும்விழுதுமுடனுண்டவாயான் தூயவரியுருவிற்குறளாய்ச்சென்று மாவலையைஏயானிரப்ப மூவடிமண்ணின்றெதாவென்றுஉலகேழும் […]
லக்ஷ்மி ஹயக்ரீவ சரித்திரம்
லக்ஷ்மி ஹயக்ரீவரின் “ஞானானந்த மயம் தேவம்” என்னும் ஸ்லோகத்தை தெரியாத பள்ளிக்கூட மாணவ மாணவிகள் மிக குறைவு. இந்த ஸ்லோகத்தை சொன்னால் படிப்பு வரும், நல்ல மதிப்பெண் வரும் என்று பலமான நம்பிக்கையுடன் சொல்லுவோம். ஆனால் லக்ஷ்மி ஹயக்ரீவ பெருமாளை பற்றியோ அவரது அவதாரத்தின் மகிமையை பற்றியோ தெரிந்தவர்கள் மிக குறைவு. திருமாலின் எண்ணற்ற அவதாரங்களில் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவ அவதாரம் மிக விசேஷமான அவதாரம். ஸ்ரீமத் பாகவத புராணத்தில் படைப்பின் ஆரம்பம் முதல் முடிவு வரை […]
வினாயகருக்கு வடக்கிலிருந்து வந்த யானைத்தலை வரலாறு
வினாயகருக்கு யானத்த்லை வந்தது எப்படி என்பதற்க்கு வட மாநிலங்களில் ஒருவரலாறு சொல்கிறார்கள். அதாவது, ஒரு நாள் பிரம்மா உயிர்களைப் படைத்துக்கொண்டிருந்த போது, தொழிலில் சற்று கவனமில்லாமல், தூக்கக் கலக்கத்தில்கொட்டாவி விட்டார். கொட்டாவி சோம்பலின் அறிகுறி. சோம்பல் வந்து விட்டால்துன்பமும் வந்து விடும். அந்த கொட்டாவியில் இருந்து ஒரு அரக்கன் பிறந்தான். அவன்பிரம்மாவிடம் “தாயில்லா பிள்ளையான நான், தங்களின் பிள்ளையாகவிரும்புகிறேன்,” என்றான். பிரம்மா சம்மதிக்கவில்லை. கோபம் கொண்ட அவன்,“அப்படியானால், நான் கேட்கும் வரத்தையாவது தாருங்கள்,” என்றான். பிரம்மாசம்மதிக்க, “நான் […]