Paramparaa – The Tradition Continues…

  பிராட்டியின்பிரமிக்கத்தக்ககருணை

 ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளிடம் பிராட்டி, “ஸ்வாமி! தெற்கு நோக்கி ஏன் சயனத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டாள். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குப் பின் பிராட்டிக்கு ஏன் இந்த சந்தேகம் என்று பெருமாளுக்கு ஆச்சரியம். “விபீஷணனோடு நாம் இலங்கைக்கு சென்றிருக்க வேண்டும்,” என்றார் அவர். பெருமாள் வீபிஷணனுக்காக தெற்கு நோக்கி சயனம் கொண்டிருப்பதாக பெரியாழ்வார் பாசுரத்தில் கூறுகிறார். ஆனால், இதெல்லாம் கட்டுக்கதை என்கிறார் வேதாந்த தேசிகர். “”கோதைநாச்சியாரான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளைக் காணவே பெருமாள் தெற்கு நோக்கி சயனம் கொண்டிருக்கிறார். பெருமாளுக்கு பெண் கொடுத்த […]

ஹனுமன்ஜெயந்தி – பக்தர்களுக்குகிடைத்தவரப்பிரசாதம்

இந்த ஆண்டு ஜனவரி 11ம் தேதி ஹனுமன் ஜெயந்தி விமரிசையாக நடைபெற இருக்கிறது. ஸ்ரீ ஆஞ்ஜனேய ஸ்வாமியின் விசேஷமே அலாதியானது. அவர் பக்தர்களுக்கு என்னென்ன அனுக்கிரகம் செய்கிறார் என்பதைப் பார்த்தால், அவருக்கு என்ன விசேஷம் என்று தெரியும். அதனால் தானோ என்னவோ, ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு ஸ்ரீ சந்திரசேகர ஸரஸ்வதி ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள் ஆஞ்ஜனேயரின்  பெருமைகளை பற்றி வானளாவ புகழ்கிறார்.  அதை பின்வருமாறு பார்ப்போமா? புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா […]

புதிய பரிமாணத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி

நெல்லூர் ரங்கநாயகுல பேட்டையில் வசிக்கும் திரு.கடாம்பி நரசிம்மன் ஒரு அற்புதமான சித்திரக் கலைஞர் .அவர் தம் திறமைக்காக இந்தியன் புத்தக விருது பெற்றிருக்கிறார் . அவர் தசரா உற்சவம் முன்னிட்டு ஸ்ரீ வாரி உற்சவ சந்தர்ப்பத்தில் ஸ்ரீ ஏழுமலையானின் திரு உருவத்தை ஸ்ரீ தேவி பூதேவி சமேதராக நாம் சாதாரணமாக பயன்படுத்தும் அட்டையை கொண்டு விக்கிரகங்களாக படைத்துள்ளார் .அவர் தம் அற்புத படைப்பினை தன்  இல்லத்தில் தசரா சந்தர்ப்பத்தில் வைத்து பூஜை செய்து வருகிறார்.அவர் பகுதியில் உள்ள […]

லலிதா ஸஹஸ்ரநாமம் பிறந்த கதை

லலிதா ஸஹஸ்ரநாமம் பிறந்த அருமையான கதையை பார்ப்போமா?அம்பிகையின் துதி நூல்களில் முதலிடம் வகிப்பது ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம். இதை உபதேசித்தவர் ஹயக்ரீவர். உபதேசம் பெற்றவர் அகஸ்திய முனிவர். உபதேசம் செய்தவரும் சாதாராணமானவர் அல்ல, உபதேசம் பெற்றவரும் சாதாரணமானவர் அல்ல. பிரம்மதேவரிடம் இருந்து அசுரன் ஒருவன் வேதங்களைக் கவர்ந்துகொண்டு போனபோது, மகாவிஷ்ணு ஹயக்ரீவராக (குதிரை முகம் கொண்டவராக) வந்து, அசுரனைக் கொன்று, வேதங்களை மீட்டார். ஞானத்தின் வடிவமே ஹயக்ரீவர். அப்படிப்பட்டவர், லலிதா ஸஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்திருக்கிறார். உபதேசம் பெற்ற […]

சிரீவரமங்கை – அரியதிவ்யஸ்தலம்

நம்மாழ்வாரால் பாடப்பட்ட சிரீவரமங்கை என்னும் திவ்ய ஸ்தலத்திற்கு வானமாமலை, நாங்குநேரி, தோத்தாத்ரி ஸ்ரீவரமங்கை நகர் என்ற பல்வேறு பெயர்களும் உண்டு.  திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் செல்லும் பாதையில் இத்தலம் அமைந்துள்ளது.  பிரம்மாண்ட புராணம், ஸ்கந்த புராணம் போன்றவற்றில் இத்தலம் பேசப்படுகிறது. உரோமச முனிவர் தவஞ்செய்து திருமாலைக் கண்டதால் உரோமஷேத்திரம் என்றும், ஸ்ரீவரமங்கையாக திருமகள் இவ்விடத்தில் வந்து வளர்ந்து பிறகு எம்பெருமானை மணந்து கொண்டதால் ஸ்ரீவரவரமங்கை (சீரிவரமங்கல நகர்) எனவும், ஆதிசேடன் இங்கு தவமியற்றி திருமாலுக்கு அணையாக இருக்கும் பேறு […]

பெருமை மிக்க  ராம நாமத்தின் மகிமை 

எப்போதும் மந்திரத்தையோ நாமத்தையோ உச்சரித்துக் கொண்டிருப்பது அஜபா எனப்படும். எந்நேரமும் விழித்திருக்கும்போதும் தூங்கும்போதும் எந்நேரமும் எப்போதும் உச்சரித்துக் கொண்டிருப்பது.இருதயத்தில் இறைவனை உணரும்வரை உச்சரித்துக் கொண்டிருப்பது. இந்த அஜபா ஜபம் உடல் மனம் ஆத்மா  உங்கள் உடல் செல்கள் அனைத்திலும் ஊடுருவி பாயும். இறைவனுக்கும நமக்கும் இடைவிடாத தொடர்பு கிடைக்கும். இதற்கு உதாரணமாக  ராம் அனுமனை சொல்லலாம். சீதாதேவிக்கு  எப்போதும் அனுமன் மீது சிறிது பொறாமை. ஏனெனில் ராமனும் சீதாவும் ஒன்றாக இருக்கும் போது அனுமன் வந்துவிட்டால் கூட […]

ராகத்தில் வெளிப்படும் அனுமனின் உற்சாகம்

அருணாசல கவிராயர் இராம நாடக கீர்த்தனைகளில் அனைவராலும் அறியப்பட்ட பாடல்களில் ” கண்டேன் சீதையை” என்ற பாடலும் ஒன்று. அனுமன் சீதா பிராட்டியை கண்டு விட்ட சேதியை ஓடோடி வந்து ராமருக்கு தெரிவிக்கிறார். அனுமன் சொல்லின் செல்வர்  அல்லவா. முதலில்  பாசிடிவ்வான கண்டேன் என்ற சொல்லை சொல்லி பிறகு சீதையை என்று குறிப்பிடுகிறார். இந்த பாடலை ஆலத்தூர் பிரதர்ஸ் பாகேஸ்வரியில் பாடியுள்ளார்கள். வேறு யாரோ வசந்தா ராகத்தில் பாடி இருக்கிறார்கள். வசந்தா ராகம் மகிழ்ச்சியை தூண்டும் எடுப்பான […]

கப்பூர் ஸ்ரீ லஷ்மிநாராயண பெருமாள் திருக்கோயில் மஹா  சம்ப்ரோக்க்ஷணம் விமரிசையாக நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கப்பூர் ஸ்ரீ லஷ்மிநாராயண பெருமாள் திருக்கோயிலில் மஹா சம்ப்ரோசஷணம் 12.9.2022 அன்று சிறப்பாக நடைபெற்றது. பக்தி தொலைகாட்சியில் இந்த விழாவை கண்டு மகிழலாம்.(லிங்க் இணைக்கப்ப்பட்டிருக்கிறது) செப்டம்பர் 13-ஆம் தேதி முதல், 48 நாட்கள் தொடர்ந்து மந்டலாபிஷேகம் நடைபெறும். அதற்கு பக்தர்கள் ஒரு நாள் அல்லது சில நாட்கள் தொடர்ந்து ஸ்பான்சர் செய்யலாம். மக்களின் நிதிநிலைமையை கருதி, ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.  ஆகவே பணமோ, அல்லது காணிக்கையோ, கீழ்கண்ட முகவரியில் […]